நாம் தமிழ்ச் சங்கம்: பொங்கல் விழா அரோரா: வறியோர்க்கு உணவு மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கம்: பொங்கல் விழா BATM: பசுமைப்போராளி ரேவதி உரை சான் டியகோ: பாரதி கலைவிழா லலிதா சஹஸ்ரநாம கோடியர்ச்சனை
|
|
அமெரிக்காவில் ஜல்லிக்கட்டு ஆதரவுப் பேரணிகள் |
|
- சின்னமணி|பிப்ரவரி 2017| |
|
|
|
|
ஜனவரி மாதம் முழுவதுமே அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு ஆதரவுப் பேரணிகள் நடந்தன. வார இறுதியில் மட்டுமல்லாமல் வார நாட்களிலும் இந்த நிகழ்வுகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
ரிச்மண்ட்: ரிச்மண்ட் நகரில் கவிதா பாண்டியன் தலைமையில் ரிச்மண்ட் டீப் ரன் பார்க்கில், டிசம்பர் மாதத்தில் முதல் கூட்டம் நடைபெற்றது. இதில் 100 பேர் பங்கேற்றனர். அடுத்து, ஜல்லிக்கட்டு ஆர்வலரும் காங்கேயம் கால்நடைஆராய்ச்சி மையத்தின் அறங்காவலருமான கார்த்திகேய சிவசேனாபதியுடன் ஒரு பல்வழித் தொடர்பு கருத்தரங்கத்திற்கு உலகத் தமிழ் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.
நியூ யார்க்: ஜனவரி 6: நியூ யார்க் பங்குச்சந்தை அருகிலுள்ள காளைமாட்டுச் சிலையருகில் பேரணி ஒன்றை நடத்தினர். சசிகுமார் அழைப்பு விடுத்திருந்தார்.
பென்டன்வில், அர்க்கான்சா: ஜனவரி 11: அர்க்கான்சா பெண்டன்வில் நகரின் மையப்பகுதியில் சுமார் 100 பேர் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. வசந்த் ஏற்பாடு செய்திருந்தார்.
அட்லாண்டா: ஜனவரி 13: ஐம்பதுக்கும் மேற்பட்டோர், அட்லாண்டா இந்தியத் தூதரக அதிகாரி நாகேஷ் சிங்கைச் சந்தித்து பிரதமர் மோதிக்கு கோரிக்கை மனு ஒன்றை வழங்கினர். மாலை 5 மணிக்கு கம்மிங், ஷரோன் சாலை பூங்காவில், அட்லாண்டா தமிழ்ச் சங்கத்தின் ஆதரவுடன் நடந்த பேரணியில் 250 பேர் கலந்து கொண்டனர். லில்பர்ன் தமிழ்ப்பள்ளி மாணவ, மாணவியர், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் ஜல்லிக்கட்டை ஆதரித்துக் கூட்டம் நடத்தினர். மாணவர்கள் ஜல்லிக்கட்டு பற்றிய படங்கள், அட்டைகளைத் தயாரித்துக் காட்சிப்படுத்தினர்.
மினியாபொலீஸ்: ஜனவரி 14: ஈடன்பார்க் லேக் பூங்காவில் பேரணி நடைபெற்றது.
நியூ ஜெர்ஸி: ஜனவரி 14: ரூஸ்வெல்ட் பூங்காவில் பேரணி நடைபெற்றது. ஜனவரி 21: திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளி ஒரு பேரணியை தாமஸ் ஜெஃபர்சன் நடுநில்லைப்பள்ளி மைதானத்தில் நடத்தியது.
மேரிலாண்ட்: ஜனவரி 14: காக்கிஸ்வில் நகரில் நடந்த கூட்டத்தில் ஜல்லிக்கட்டும் நாட்டின மாடுகளின் உயிர்சுழற்சியும் என்று வரைபடத்துடன் விளக்கம் அளிக்கப்பட்டது. பார்க்க
சிகாகோ: ஜனவரி 18: 700க்கும் அதிகமானோர் கூடி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக முழக்கம் எழுப்பினர். இந்தியத் தூதரகத்திற்கான மனுவில் கையெழுத்து வாங்கினர்.
மிசோரி: ஜனவரி 18: செயின்ட் லூயிஸில் மிசோரி தமிழ்ச்சங்கத்தின் சார்பில் காந்தி மையத்தில் மாலை 6 மணிக்கு பறையிசை முழங்க ஊர்வலம் சென்றனர். பின்னர் உள்ளரங்கில் கூட்டம் தொடர்ந்தது. |
|
டெக்சஸ்: ஜனவரி 18: டாலஸ் மாநகரம் இர்விங் நகரில், காந்தி சிலை அருகே மனித்சங்கிலி அணிவகுப்பு நடைபெற்றது..குழந்தைகள் உட்பட 250 பேர் கலந்து கொண்டனர்.
ஜனவரி 19: ஹூஸ்டன் இந்தியத் தூதரகம் முன்னர் 50க்கும் மேற்பட்டோர் அணிவகுத்துச் சென்று, தூதரக அதிகாரி டாக்டர். அனுபம் ரேயிடம் கோரிக்கை மனு வழங்கினார்கள்.
ஜனவரி 21: ஜார்ஜ் புஷ் பூங்காவில் நடந்த பேரணியில் 750 பேர் பங்கேற்றனர். ஜனவரி 22: டாலஸ் நகர மையப்பகுதியில் காலை 9 மணி அளவில் நடைபெற்ற பேரணியில் 1500 பேர் பங்கேற்றனர். பின்னர் நடைபெற்ற ஒருநாள் அடையாள உண்ணாவிரதத்தில் 50 பேர் பங்கேற்றனர்.
அரிசோனா: ஜனவரி 19: ஃபீனிக்ஸின் ஸ்காட்ஸ்டேல் நகர மையப்பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் 150 பேர் பங்கேற்றனர்.
சான் ஃப்ரான்சிஸ்கோ: ஜனவரி 20: இந்தியத் தூதரகம் முன்பாக வளைகுடாப் பகுதி தமிழ் மன்றத்தின் சார்பில் பேரணி நடைபெற்றது. தூதரக அதிகாரி வெங்கடேசன் அஷோக் அவர்களிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
நேஷ்வில்: ஜனவரி 21: பிரண்ட்வுட் க்ராக்கெட் பூங்கா வளாகத்தில் காலை 11 மணிக்குப் போராட்டம் நடைபெற்றது. 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். டெட்ராய்ட், கொலம்பஸ் ஒஹையோ, டேட்டன் ஒஹையோ, விஸ்கான்ஸின் மில்வாக்கி, நெப்ராஸ்கா ஓமஹா, டெக்சஸ் சான் அன்டோனியோ, டென்னசி மெம்ஃபிஸ் உள்ளிட்ட இடங்களிலும் பேரணிகள் நடந்தன. மில்வாக்கியில் கன்னடர், மலையாளி, தெலுங்கர் மற்றும் வட இந்தியர் தத்தம் மொழிகளில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
மில்வாக்கி: ஜனவரி 21: விஸ்கான்சின் புரூக்ஃபீல்டில் உள்ள மிட்செல் பூங்காவில் ஜல்லிக்கட்டை ஆதரித்துப் பேரணி நடத்தினர்.
தகவல் உதவி: ஜெகதீஷ் ஷங்கர் (ஹூஸ்டன்), பார்த்திபன் சுந்தரம் (நியூ ஜெர்சி), உமா செந்தில்
தொகுப்பு: சின்னமணி, டாலஸ், டெக்சஸ் |
|
|
More
நாம் தமிழ்ச் சங்கம்: பொங்கல் விழா அரோரா: வறியோர்க்கு உணவு மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கம்: பொங்கல் விழா BATM: பசுமைப்போராளி ரேவதி உரை சான் டியகோ: பாரதி கலைவிழா லலிதா சஹஸ்ரநாம கோடியர்ச்சனை
|
|
|
|
|
|
|