டென்னசி: 'நீங்களே செய்யலாம்' முகாம் அரங்கேற்றம்: ஈஷா மைசூர்யா அரங்கேற்றம்: சுருதி சொக்கலிங்கம் அரங்கேற்றம்: ரசிகா சுதர்ஸன் அரங்கேற்றம்: ரிஷிகேஷ் பாலாஜி அரங்கேற்றம்: அனாமிகா கண்ணன் அரங்கேற்றம்: ஷ்ரேயா சுரேஷ் மைத்ரி நாட்யாலாயா: ஆண்டு விழா
|
|
மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்கா-கனடா விஜயம் |
|
- சூப்பர் சுதாகர்|ஆகஸ்டு 2016| |
|
|
|
|
2016 ஜூன் 4ம் தேதி முதல், ஜூன் 30ம் தேதிவரை, மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி தேவி அவர்கள் சியாட்டில், சான் ஃபிரான்சிஸ்கோ- விரிகுடாப்பகுதி, லாஸ் ஏஞ்சலஸ், சான்ட ஃபே, டாலஸ், சிகாகோ ஆகிய இடங்களுக்கு வருகை தந்திருந்தார். அன்பின் அடையாளமான அம்மா, தம்மைக் காணவந்த ஒவ்வொருவரையும் பரிவோடு அரவணைத்து அளவற்ற அன்பை வழங்கினார். தினமும் ஆன்மீக சொற்பொழிவு, தியானம், பஜனைகள் மற்றும் அம்மாவின் தரிசனம் நடைபெற்றன.
"அடுத்த கணம் நமது கையில் இல்லை. அடுத்த மூச்சு விடுவது நிச்சயமில்லை. கடந்தகாலம் என்பது செல்லாத காசோலையைப் போன்றது - அதற்கு மதிப்பு இல்லை. நாளை என்பது நம் கையில் இல்லை. எனவே இந்த கணத்தில் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். ஐஸ்கிரீம் சாப்பிடும் ஒருவன், கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் பற்றி நினைத்துக் கொண்டே சாப்பிட்டால், ஐஸ்கிரீமின் சுவையை அவனால் உணர முடியாது. இந்தக் கணத்தில் வாழ்ந்தால்தான் வாழ்க்கையைச் சுவைக்க முடியும்" என்கிறார் அம்மா.
ஜூலை மாதத்தில் அம்மா வருகைதர இருக்கும் ஊர்களும், தேதிகளும்: நியூயார்க் 07.01 - 07.03 பாஸ்டன் 07.05 - 07.06 வாஷிங்டன் டி.சி. 07.08 - 07.09 டொரன்டோ, கனடா 07.11 - 07.14
இலவச பொதுநிகழ்ச்சிகளில் அம்மாவின் தரிசனம், ஆன்மீகச் சொற்பொழிவுகள், தியானம் மற்றும் பஜனைகள் நடைபெறும். டொரன்டோவில் ஆன்மீகமுகாம் (retreat) நடைபெறும். இதில், ஆன்மீக மற்றும் தியான வகுப்புகள், தன்னலமற்ற சேவை, அம்மாவோடு கேள்வி-பதில், அம்மாவின் உணவு பரிமாற்றம், ஒருங்கிணை அமிர்தா தியானம் (Integrated Amrita Meditation) ஆகியவை நடைபெறும்.
அம்மா ஆற்றும் பொதுநலத் தொண்டுகள் பற்றி அறிய: www.embracingtheworld.org மேலும் விபரங்களுக்கு: www.amma.org |
|
சூப்பர் சுதாகர், சான் ரமோன், கலிஃபோர்னியா |
|
|
More
டென்னசி: 'நீங்களே செய்யலாம்' முகாம் அரங்கேற்றம்: ஈஷா மைசூர்யா அரங்கேற்றம்: சுருதி சொக்கலிங்கம் அரங்கேற்றம்: ரசிகா சுதர்ஸன் அரங்கேற்றம்: ரிஷிகேஷ் பாலாஜி அரங்கேற்றம்: அனாமிகா கண்ணன் அரங்கேற்றம்: ஷ்ரேயா சுரேஷ் மைத்ரி நாட்யாலாயா: ஆண்டு விழா
|
|
|
|
|
|
|