டென்னசி: 'நீங்களே செய்யலாம்' முகாம் அரங்கேற்றம்: ஈஷா மைசூர்யா அரங்கேற்றம்: சுருதி சொக்கலிங்கம் அரங்கேற்றம்: ரசிகா சுதர்ஸன் அரங்கேற்றம்: ரிஷிகேஷ் பாலாஜி அரங்கேற்றம்: அனாமிகா கண்ணன் அரங்கேற்றம்: ஷ்ரேயா சுரேஷ் மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்கா-கனடா விஜயம்
|
|
|
|
ஜூன் 5, 2016 அன்று சான்பிரான்சிஸ்கோ விரிகுடாப்பகுதியில் நன்கறியப்பட்ட பரநாட்டியம் மற்று குச்சுப்புடி நடனப்பள்ளியான மைத்ரி நாட்யலாயா, தனது பத்தாம் ஆண்டுவிழாவை சான் ஹோஸே CET-SOTO அரங்கில் கொண்டாடியது. சுமார் 75க்கும் மேற்பட்ட மாணவிகள் இதில் பங்கேற்றனர். மைத்ரி நாட்டியாலயாவின் கலை இயக்குநர் திருமதி. ஷிர்ணிகாந்த் அவர்களால் இதன் ஆடற்கலை மற்றும் நுட்பத்திறன் இயக்கப்பட்டது. இந்த விழாவுக்கு 'நீலா' என்று பெயர் சூட்டியிருந்தனர். அனைத்து கருநிறக் கடவுளர்களையும் போற்றும் விதத்தில் நிகழ்ச்சி அமைக்கப்பட்டிருந்தது.
'நாராயண தே நமோ நமோ', 'ஸ்வாகதம் கிருஷ்ணா', நடேச கவுத்துவம், கணேச கவுத்துவம், சூர்ய புஷ்பாஞ்சலி, துறையூர் ராஜகோபாலாச்சாரியாரின் அடாணா வர்ணம், அம்புஜம் கிருஷ்ணாவின் 'ஆடினாயே கண்ணா', ஹிந்தோள ராகத் தில்லானா, போன்றவற்றுக்குச்சிறப்பாக நடனமாடித் தங்கள் திறமையை மாணவியர் வெளிப்படுத்தினர்.
நட்டுவாங்கத்தில் திருமதி ஷிர்ணிகாந்த், வாய்ப்பாட்டில் மேகா ரங்கநாதன், மிருதங்கத்தில் அமித் ரங்கநாதன், வயலினில் கீர்த்தி சுந்தரமூர்த்தி, புல்லாங்குழலில் பரத்வாஜ் ஆகியோர் மிகச்சிறப்பாகப் பக்கம் வாசித்தனர். |
|
இராஜேஷ்குமார் |
|
|
More