தெரியுமா?: சாண்டில்யனின் 'கடல் புறா' ஒலிநூல் வெளியீடு தெரியுமா?: ஸ்வேதா ரவிசங்கர்: நாடுதழுவிய நாட்டியப் பயணம் மக்செஸே விருது
|
|
தெரியுமா?: இறகுப்பந்து விளையாட்டின் நம்பிக்கை நட்சத்திரங்கள் |
|
- மீனாட்சி கணபதி|ஆகஸ்டு 2016| |
|
|
|
|
இறகுப்பந்து விளையாட்டு அமெரிக்காவில் வளர்ந்துவரும் ஒரு விளையாட்டு. அமெரிக்காவின் எல்லா நகரங்களிலும் விளையாடப்படுவது. இதை நிறைய ஆசியர்கள், இந்தியர்கள் சிறப்பாக விளையாடியும் வருகின்றனர்.
கடந்த ஜூலை 3ம் தேதிமுதல் 10ம் தேதிவரை சிறுவர்களுக்கான தேசியச் இறகுப்பந்து போட்டிகள் சியாட்டலில் உள்ள ஹார்பர் பாய்ண்ட் பாட்மிண்டன் க்ளப்பில் நடைபெற்றது. தேசிய சேம்பியன்களைத் தேர்ந்தெடுப்பதற்காக இப்போட்டியை, 'அமெரிக்க பாட்மிண்டன் கழகம்' ஆண்டுதோறும் நடத்துகிறது. பல வயதுப் பிரிவினர்களுக்கான, சிறுவர் ஒற்றையர், சிறுவர் இரட்டையர், சிறுமியர் ஒற்றையர், சிறுமியர் இரட்டையர், மற்றும் கலப்பு இரட்டையர் என ஐந்து பிரிவுகளாக இப்போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இதில் பல இந்தியச் சிறுவர், சிறுமியர் சேம்பியன் பட்டம் வென்றுள்ளனர். அவர்கள் பின்வருமாறு: சித்தார்த் ஜவ்வாஜி (U-13 சிறுவர் ஒற்றையர்) நேத்ரா ஷெட்டி (13 வயதுகுட்பட்ட சிறுமியர் ஒற்றையர்), நேத்ரா ஷெட்டி - ஜோலி வாங் (U-13 சிறுமியர் இரட்டையர்) கோகுல் கல்யாணசுந்தரம் (19 வயதுகுட்பட்ட சிறுவர் ஒற்றையர்) ஆகியோர் 2016க்கான தேசிய சேம்பியன்ஷிப்களை வென்றனர். இவ்வாண்டு அரையிறுதியில் தேர்வுபெற்ற இந்தியர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அர்ஜுன் சாட்டர்ஜி, வெஸ்லி சென் (U-11 சிறுவர் இரட்டையர், இரண்டாமிடம்) சஹஸ்ரா சட்டா, எல்லா லின் (U-11 சிறுமியர் இரட்டையர், இரண்டாமிடம்) சித்தார்த் ஜவ்வாஜி, டேனியல் பெய்லின் (U-13 சிறுவர் இரட்டையர், மூன்றாமிடம்) ஷ்ரியா சொக்கலிங்கம் (U-13 சிறுமியர் , நான்காமிடம்) சித்தார்த் ஜவ்வாஜி, நேத்ரா ஷெட்டி (U-13 கலப்பு இரட்டையர், இரண்டாமிடம்) ஸ்ரீ கொல்லா (U-15 ஆண்கள் ஒற்றையர், மூன்றாமிடம்) நேஹா ஷெட்டி (U-15 சிறுமியர் ஒற்றையர், நான்காமிடம்) மாளவிகா இளங்கோ (U-17 சிறுமியர் ஒற்றையர், நான்காமிடம்) கார்த்திக் கல்யாணசுந்தரம், எரிக் சாங் (U-17 சிறுவர் இரட்டையர், நான்காமிடம்) கோகுல் கல்யாணசுந்தரம், பிரையன் டுவோங் (U-19 சிறுவர் இரட்டையர், மூன்றாமிடம்) ஷ்ரேயா போஸ், சௌம்யா கடே (U-19 சிறுமியர் இரட்டையர், இரண்டாமிடம்) செம்யா கடே, பெஞ்சமின் சென் (U-19 கலப்பு இரட்டையர், மூன்றாமிடம்) |
|
|
இவ்வருட ஆரம்பத்தில் USAB அமைப்பு, PanAmerican International Tournament கலந்துகொள்வோரைத் தேர்ந்தெடுப்பதற்காக சர்வதேச இளைஞர் போட்டிகளை நடத்தியது. வட, தென் அமெரிக்காவின் எல்லா நாடுகளையும் சேர்ந்த 4 சிறந்த வீரர்கள் பங்கேற்கும் இப்போட்டியில் விளையாடுவதற்கான வீரர்களைத் தேர்ந்தெடுக்க இப்போட்டிகள் நடத்தப்பட்டன. 2016ம் ஆண்டுக்கான PanAmerican இறகுப்பந்து போட்டிகள் ஜூலை 18 முதல் 23 வரை பெருவின் தலைநகரமான லிமாவில் நடைபெற்றது.
இதில் அமெரிக்காவின் சார்பில் பங்கேற்ற ஆசிய வீரர்கள் பின்வருமாறு: அர்ஜுன் சாட்டர்ஜி, வெஸ்லி சென் (U-11, சிறுவர் இரட்டையர், இரண்டாமிடம்) சித்தார்த் ஜவ்வாஜி (U-13, சிறுவர் ஒற்றையர், PanAmerican சேம்பியன்) சித்தார்த் ஜவ்வாஜி, டானியல் பெய்லின் (U-13, சிறுவர் இரட்டையர், PanAmerican சேம்பியன்) நேத்ரா ஷெட்டி, ஜோலி வாங், (U-13, சிறுமியர் இரட்டையர், PanAmerican சேம்பியன்) சித்தார்த் ஜவ்வாஜி, நேத்ரா ஷெட்டி (U-13. கலப்பு இரட்டையர், மூன்றாமிடம்) நேஹா ஷெட்டி (U-15, சிறுமியர் ஒற்றையர், மூன்றாமிடம்) கார்த்திக் கல்யாணசுந்தரம், எரிக் சாங் (U-15, சிறுவர் இரட்டையர், இரண்டாமிடம்) கார்த்திக் கல்யாணசுந்தரம், ஏஞ்சலா ஸாங் (U17, கலப்பு இரட்டையர், மூன்றாமிடம்) கோகுல் கல்யாணசுந்தரம் (U-19, சிறுவர் இரட்டையர், இரண்டாமிடம்) சித்தார்த் ஜவ்வாஜியும், நேத்ரா ஷெட்டியும் தத்தம் பிரிவுகளில் முதலிடத்தைப் பிடித்து PanAmerican சேம்பியன்ஷிப்பை வென்றனர். கோகுல் இறுதிச்சுற்றில் சிறப்பாக ஆடி, 16-21, 21-16, 19-21 என்ற புள்ளிகளில் பிரேசில் நாட்டின் முதன்மை ஆட்டக்காரரான க்ளேசன் நோப்ரே சேன்டோஸிடம் தோற்றார். ஒரு கட்டத்தில் அவர் கடைசி ஆட்டத்தில் 17-13 என்ற புள்ளிகளில் முன்னணியில் இருந்தார். கோகுல் மற்றும் கார்த்திக் கல்யாணசுந்தரம் தென்றல் பதிப்பாளரின் குடும்ப அங்கத்தினர்கள் ஆவர்.
(மேலே காணும் குழு படத்தில் PanAmerican International Badminton Championship போட்டிகளில் பங்கேற்ற அனைத்து ஆசிய இந்தியச் சிறாரைக் காணலாம்)
மீனாட்சி கணபதி |
|
|
More
தெரியுமா?: சாண்டில்யனின் 'கடல் புறா' ஒலிநூல் வெளியீடு தெரியுமா?: ஸ்வேதா ரவிசங்கர்: நாடுதழுவிய நாட்டியப் பயணம் மக்செஸே விருது
|
|
|
|
|
|
|