|
ஜன்னல் பாப்பா! |
|
- நளினி|ஆகஸ்டு 2016| |
|
|
|
|
இட்டமான குட்டிப் பழம் எட்டிப் பிடிக்க முடிஞ்சுது தொட்டுப் பாத்து கடிக்கணுன்னா சுருக்குனு முள்ளு குத்துது!
பட்டு வண்ணப் பூச்சி ஒண்ணு பறந்து வந்து சுத்துது மெத்து மெத்து ரெக்கை ரெண்டென் மேல வந்து மோதுது!
சாலை மேல கார்கள் எல்லாம் சர்ரு புர்ருனு போகுது சின்ன வண்டி பெரிய வண்டி சீறிப் பாஞ்சு ஓடுது! |
|
பள்ளிக் கூடப் பசங்க எல்லாம் பாதை யிலே ஆடுது சேந்து பாடி ஆடிடவே சின்ன மனசு ஏங்குது!
குட்டிக் குழந்தை எனக்கு இப்போ ரெண்டு வயசு ஆகுது சட்டுப் புட்டுனு அம்மா வந்து சாத்திக் கதவ மூடுது!
விரையும் ராக்கெட் போல நானும் வேகமாக வளரணும் நீல வானம் ஏறிப் போயி நிலவைக் கையில் புடிக்கணும்!
நளினி, மில்வாக்கி |
|
|
|
|
|
|
|