கபாலி AAA (அன்பானவன், அசராதவன், அடங்காதவன்) கடம்பன் பைசா தகடு ஆளுக்கு பாதி 50-50
|
|
|
பெற்றோர்கள் விவாகரத்து செய்துகொண்டால், அதில் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகள்தான். இரண்டு குழந்தைகள் பிறந்துவிட்டால், அந்தத் தம்பதிக்கு விவாகரத்து வழங்கக்கூடாது என்ற கருத்தை மையமாக வைத்து உருவாகி வருகிறது வில்லங்கம். நந்தா நாயகனாக நடிக்க, காயத்ரி நாயகியாக நடிக்கிறார். உடன் சோனியா அகர்வால், மகேஸ்வரி, பேபி ஜனனி, பேபி ரோஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பாடல்களை சிநேகன், கார்த்திக், இறையன்பு ஆகியோர் எழுத பரத்வாஜ் இசையமைக்கிறார். ரா.நா. சரவணன் இயக்குகிறார். "ஒரு ஆண் செய்கிற தவறுக்கு உடனடியாக தண்டனை தரத்துடிக்கிற இந்தச் சமூகம், அதுவே ஒரு பெண் என்றால் பரிதாபத்தோடு பார்க்கிறது. இந்த ஒருதலைப்பட்சமான பார்வை தவறானது. எல்லாத் தவறுகளையும் ஒரே மாதிரியான கண்ணோட்டத்தில்தான் பார்க்கவேண்டும் என்பதைத்தான் இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறேன்" என்கிறார் இயக்குனர். சந்தேகமே இல்லை, வில்லங்கம்தான்! |
|
அரவிந்த் |
|
|
More
கபாலி AAA (அன்பானவன், அசராதவன், அடங்காதவன்) கடம்பன் பைசா தகடு ஆளுக்கு பாதி 50-50
|
|
|
|
|
|
|