தெரியுமா?: கவிஞர் உமா மோகன் தெரியுமா: லௌடன்: இருமொழி அங்கீகாரம் கேட்டு விண்ணப்பம் தெரியுமா?: தமிழ் தொழில்முனைவோர் சந்திப்பு
|
|
|
|
பன்னாட்டுத் தமிழ் அகடமி (ITA, மேனாள் CTA) புலம்பெயர்ந்தோர் தமிழ்க்கல்வி மாநாட்டை 2016 மே மாதம் 27 தொடங்கி 30ம் தேதிவரை கலிஃபோர்னியாவின் விரிகுடாப்பகுதியில் சான்ட க்ளாரா கன்வென்ஷன் சென்டரில் நடத்துகிறது. முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
மே 28; காலை 9:00 - மாலை 5:30: ஆய்வரங்கம் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழறிஞர்கள் பங்கேற்கும் ஆய்வரங்கம். தமிழ் கற்பிப்பதில் உதவும் பல்வேறு உத்திகள், கருவிகள்; புலம்பெயர்ந்த தமிழாசிரியர்களின் அனுபவங்கள் மற்றும் ஆலோசனைகள்; முன்னணி தமிழறிஞர்களின் ஆய்வுக்கட்டுரைகள் மற்றும் உரைகள்; கேள்வி பதில் நேரம் ஆகியவை இடம்பெறும்.
மே 29; காலை 9:00 - மாலை 5:00: பயிலரங்கம் பல்வேறு தலைப்புகளில் மாணவர்கள், அமெரிக்க மற்றும் பிறநாட்டு பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மற்றும் தமிழறிஞர்களின் உரை; தமிழ் கற்றல், கற்பித்தலில் தங்கள் அனுபவம் மற்றும் ஆலோசனை; கேள்வி பதில் நேரம் ஆகியவை இடம்பெறும். இரண்டு நாட்களிலும் கலைநிகழ்ச்சிகள் மாலை 5:30 முதல் 8:30 வரை நடைபெறும்.
மே 30; காலை 9:30 - மாலை 3:30: கண்காட்சி தமிழ் மொழி, தமிழர் வரலாறு, தமிழ்க் கலாசாரம், கலைகள் ஆகியவற்றை விளக்கும் கண்காட்சி. இதில் புத்தகங்கள், குறுந்தகடு (CD), தமிழ் பயிற்றும் கருவிகள் மற்றும் மென்பொருட்கள் கிடைக்கும்.
குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள்: மேஜிக் ஷோ, பலூன், முகப்பூச்சு (face painting) மற்றும் பல்வேறு விளையாட்டுகள். புடவை மற்றும் ஆபரணக் கடைகள் உண்டு. எல்லா நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி இலவசம்.
மேலும் விவரங்களுக்கு www.tamilconference.org |
|
நித்யவதி சுந்தரேஷ், ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா |
|
|
More
தெரியுமா?: கவிஞர் உமா மோகன் தெரியுமா: லௌடன்: இருமொழி அங்கீகாரம் கேட்டு விண்ணப்பம் தெரியுமா?: தமிழ் தொழில்முனைவோர் சந்திப்பு
|
|
|
|
|
|
|