அரங்கேற்றம்: ஸ்ரேயா சாகர்லமுடி சிகாகோ: பரதம் நாட்டியப்பள்ளி ஆண்டுவிழா ஐடியல் கிட்ஸ்: திறன் தேடும் நிகழ்ச்சி அரோரா: வறியோர்க்கு உணவு CIF: சிவகாமியின் சபதம். SATS: பொங்கல் விழா
|
|
|
|
மார்ச் 13, 2016 அன்று டென்னசி தமிழ்ச் சங்கத்தின் மகளிர் பிரிவினர் நோலன்ஸ்வில் ஹிஸ்டாரிகல் சொசைட்டி வளாகத்தில் மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு முகாம் ஒன்றை நடத்தினர். மேத்யூ வாக்கர் காம்ப்ரஹென்ஸிவ் ஹெல்த் சென்டரில் மார்பகப் புற்றுநோய்க் கல்வியாளராகப் பணியாற்றும் மார்லின் ஆடம்ஸ், நோய்பற்றிய அடிப்படை விவரங்களை எடுத்துரைத்தார்.
வேண்டர்பில்ட் இன்க்ராம் சென்டர் இணைப்பேராசிரியர் டாக்டர். நிஷிதா ரெட்டி, மார்பகப் புற்றுநோய் வகைகள் பற்றியும், முன்கூட்டியே தெரிந்துகொள்வதால் சிகிச்சை மூலம் குணமடையலாம் என்றும் கூறினார். கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார். இந்த நோய்க்கு ஆட்பட்டவர்களின் அனுபவங்களை டாக்டர். கல்பனா போச்சம்பள்ளி மற்றும் கவிதா சரவணன் விவரித்தார்கள். இறுதியில் டாக்டர். ஜெயஸ்ரீ நாதன் எப்படிச் சுயபரிசோதனை செய்துகொள்வது என்பதை விவரித்தார்.
தொடர்ந்து கருப்பைவாய்ப் புற்றுநோய், நீரிழிவு, சத்துணவு, பெருங்குடல் புற்றுநோய் போன்ற தலைப்புகளில் முகாம்கள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. |
|
செய்திக்குறிப்பிலிருந்து |
|
|
More
அரங்கேற்றம்: ஸ்ரேயா சாகர்லமுடி சிகாகோ: பரதம் நாட்டியப்பள்ளி ஆண்டுவிழா ஐடியல் கிட்ஸ்: திறன் தேடும் நிகழ்ச்சி அரோரா: வறியோர்க்கு உணவு CIF: சிவகாமியின் சபதம். SATS: பொங்கல் விழா
|
|
|
|
|
|
|