அரங்கேற்றம்: ஸ்ரேயா சாகர்லமுடி சிகாகோ: பரதம் நாட்டியப்பள்ளி ஆண்டுவிழா அரோரா: வறியோர்க்கு உணவு டென்னசி: மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு முகாம் CIF: சிவகாமியின் சபதம். SATS: பொங்கல் விழா
|
|
|
|
மார்ச் 19, 2016 அன்று தி ஐடியல் கிட்ஸ் அமைப்பு கலிஃபோர்னியா மாகாணம் ப்ரீமான்ட் நகரத்தில் மிஷன் சான் ஹோசே துவக்கப் பள்ளியில் ஓவியம், கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி ஆகியவற்றை நடத்தியது. இதில் முன்னூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். போட்டிகளைப் பள்ளி முதல்வர், திரு. சக் கிரேவ்ஸ் துவங்கி வைத்தார். திரு. ரோ கன்னா (Former Deputy Asst. Secretary, U.S. Department of Commerce) சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். பரிசளிப்பு விழாவில் டாக்டர். ராஜ் சல்வான் (Planning Commissioner, Council Member for the City of Fremont), திரு. வெங்கடரமணா (Consul, Consulate of India, San Francisco), திரு. பிரையன் (Ro's Campaign Manager) ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்கினர்.
தி ஐடியல் கிட்ஸ் (The Ideal Kids) குழந்தைகளை மனதளவிலும, உடலளவிலும் ஆரோக்கியமான, வலிமையானவர்களாக ஆக்குவதை நோக்கமாகக் கொண்ட தன்னார்வ அமைப்பு. குழந்தைகளைக் கோடை விடுமுறையில் ஞாயிற்றுக் கிழமைகளில் சுமார் 3 மைல் தூரம் நடக்கச் செய்கின்றனர். ஓட்டத்திற்குப் பிறகு ஆரோக்கியமான காலை உணவு வழங்கப்படுகிறது. சத்துணவு அட்டவணையும் அவர்களுக்குக் கொடுக்கப்படுகிறது. உடற்பயிற்சி, உணவு, மற்றும் உடல்நலம் குறித்து உணவியல் வல்லுனர் உரையும் பயிற்சியின் கடைசிநாளில் கொடுக்கப்படுகிறது. |
|
நூற்றுக்கணக்கான தன்னார்வத் தொண்டர்கள் இதில் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
மேலும் விவரங்களுக்கு: வலைத்தளம் www.theidealkids.org
நித்யவதி சுந்தரேஷ், ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா |
|
|
More
அரங்கேற்றம்: ஸ்ரேயா சாகர்லமுடி சிகாகோ: பரதம் நாட்டியப்பள்ளி ஆண்டுவிழா அரோரா: வறியோர்க்கு உணவு டென்னசி: மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு முகாம் CIF: சிவகாமியின் சபதம். SATS: பொங்கல் விழா
|
|
|
|
|
|
|