இந்தப் பாயசம் ரொம்ப வித்தியாசம் ஆரஞ்சுப் பாயசம் மாம்பழத் தேங்காய்ப் பால் பாயசம் அன்னாசிப்பழப் பாயசம் பலாப்பழப் பாயசம் அடைப் பிரதமன் காரட் பாதாம் பாயசம்
|
|
|
தேவையான பொருட்கள்
சேமியா - 1/2 கிண்ணம் பால் - 2 கிண்ணம் வாழைப்பழம் - 1 தேங்காய்ப் பால் - 1/4 கிண்ணம் குறுக்கிய பால் - 1/4 கிண்ணம் சர்க்கரை - 1/4 கிண்ணம் தேன் - 1 மேசைக்கரண்டி முந்திரிப் பருப்பு - 10 நெய் - 2 மேசைக் கரண்டி |
|
செய்முறை
வாழைப்பழத்தைத் தோல் உரித்து, குறுக்கிய பாலுடன் சேர்த்து மிக்ஸியில் அரைத்து இதைப் பன்னீர் (panneer) செய்வது போல பிளாஸ்டிக் அச்சில் (Plastic mould) ஊற்றிக் குளிர் சாதனப்பெட்டியின் உறைபகுதியில் (Freezer) வைக்கவும்.
அடி கனமான பாத்திரத்தில் மிதமான தீயில் சேமியாவைப் பொன்னிறமாகச் சிறிது நெய்யில் வறுக்கவும். அதில் பால் சேர்த்துக் கொதிக்கவிட்டு அடி பிடிக்காமல் அடிக்கடி கிளறியபடி வேகவிடவும். நன்றாக வெந்த பின்னர் சர்க்கரையைப் போட்டு 5 நிமிடங்கள் கொதித்தபின் தேங்காய்ப் பாலை விட்டு நுரைத்துப் பொங்கி வரும்போது இறக்கி வைத்துச் சற்று ஆற விடவும். பின்னர் ஏலப்பொடி போட்டுக் கலக்கவும்.
பின்னர் தேன் விட்டுக் கலந்து ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் ஊற்றி, குறைந்தது மூன்றுமணி நேரமாவது குளிர்சாதனப் பெட்டியின் வைக்கவும்.
பிறகு எடுத்து உண்ணும்போது வாழைப் பழக் குளிர் கட்டிகளை இதனுடன் கலந்து முந்திரி பருப்பைத் தூவி உண்ணவும்.
பின் குறிப்பு: தேங்காய்ப் பால் இல்லாமலும் செய்யலாம்.
சரஸ்வதி தியாகராஜன் |
|
|
More
இந்தப் பாயசம் ரொம்ப வித்தியாசம் ஆரஞ்சுப் பாயசம் மாம்பழத் தேங்காய்ப் பால் பாயசம் அன்னாசிப்பழப் பாயசம் பலாப்பழப் பாயசம் அடைப் பிரதமன் காரட் பாதாம் பாயசம்
|
|
|
|
|
|
|