Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2005 Issue
ஆசிரியர் பக்கம் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | நிதி அறிவோம் | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | அமெரிக்க அனுபவம் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | ஜோக்ஸ் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | கவிதைப்பந்தல் | விளையாட்டு விசயம் | வார்த்தை சிறகினிலே
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
ரேவதி வாசனின் நாட்டிய அரங்கேற்றம்
அஞ்சனா, கல்பனாவின் பரதநாட்டிய அரங்கேற்றம்
லஷ்மிநாராயணா இசைப்பள்ளியின் பிள்ளையார் சதுர்த்தி
நந்தினி தாசரதி இசை அரங்கேற்றம்
திவ்யா சந்திரன் இசை அரங்கேற்றம்
வைஷ்ணவி ரெட்டியின் நடன அரங்கேற்றம்
2005 ரெய்சின்லாந்து கேடயக் கிரிக்கெட் தொடர்
- சரஸ்வதி தியாகராஜன்|அக்டோபர் 2005|
Share:
Click Here Enlargeவடகலி·போர்னியா கிரிக்கெட் சங்கம் (NCCA) மற்றும் சன்னிவேல் கிரிக்கெட் சங்கம் (SCC) இணந்து நடத்தும் ரெய்ஸின்லாந்து கேடயத்திற்கான போட்டித் தொடர் அண்மையில் நடந்து முடிந்தது. முன்னாள் மேயரும், சன்னிவேலின் தற்போதைய பெண் பிரதிநிதியுமான ஜூலியா மில்லர் இந்தத் தொடருக்கு கெளரவத் தலைவராக இருந்து சிறந்த ஆட்டக்காரர்களுக்குப் பரிசுகளை வழங்கினார்.

சன்னிவேல் கிரிக்கெட் அமைப்பை நிறுவியவரும், இ-கிரேப்பரின் நிறுவன ஆட்சித் தலைவரும் (CEO of eGrabber) ஆன சந்திர போடாபடி அவர்கள் ஜூலியா மில்லர் அவர்களுக்கு நினைவுப் பரிசை அளித்தார். சன்னிவேல் கிரிக்கெட் அமைப்பின் தலைவரான சிவ கோலப்பா தமது வரவேற்புரையில் தொடர்ந்து ஆதரவு தரும் ஜூலியா மில்லர், ஜான் ஹோ, ஜான் லாரன்ஸ் மற்றும் சன்னிவேல் நகர அலுவலர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார்.

தென் கலி·போர்னிய கிரிக்கெட் சங்கத்தின் மூத்தோர் (Seniors) போட்டியில் தருண் பூமிரெட்டியின் சிறந்த ஆட்டம் இரண்டு நாட்களிலும் அதன் வெற்றிக்கு வித்திட்டது. இரண்டாவது ஆட்டத்தில் NCCA வெற்றிக்கு வெகு அருகில் வந்தாலும் இறுதியில் அதை இழந்தது. அதன் முன்னாள் ரஞ்சி டிரோ·பி ஆட்டக் காரரான சன்னி ரமேஷ் மற்றும் சிங்கள இளைஞர் அர்ஷத் ஜுனெய்த் (தென். கலி.) ஆகியோரின் திறமை குறிப்பிடத் தக்கவை. அருண் சுப்ரமணியன் (சன்னிவேல்), சேஷ ஹனியுர் (வட. கலி.) மற்றும் அமெரிக்க தேசிய விளையாட்டு வீரரான நசீர் இஸ்லாம் (தென். கலி.) ஆகியோர் அருமையாகப் பந்து வீசினர்.

ஜூனியர் போட்டியில் வடகலி·போர்னியச் சங்க இளைஞர்கள் இரண்டு நாட்களும் வெற்றி பெற்றனர். அனுபவம் முதிர்ந்தோருக் கான (Veterans of NCCA) போட்டியில் வடகலி·போர்னிய அணி கிரிஸ்டல் ரெய்ஸின்லாந்து மாஸ்டர்ஸ் டிரோ·பியை முதன் முறையாகப் பெற்றது.

தென்கலி·போர்னியச் சங்கத்தைச் சேர்ந்த தருண் பூமி ரெட்டி, நஸீர் இஸ்லாம், நிகில் ஐயர், நிஸார்க் படேல் ஆகியோரும், வடகலி·போர்னியச் சங்கத்தைச் சேர்ந்த சன்னி ரமேஷ், சேஷ ஹனியுர், அன்வர் மங்கல், ஸாத் சித்திக்கி, அகமது அமின் ஆகியோரும் வெவ்வேறு பிரிவுகளில் சிறப்பாக ஆடியதற்காகக் கௌரவிக்கப்பட்டனர்.
மேலும் விவரங்களுக்கு

http://www.ncalcricket.org
http://www.sccacricket.com
http://www.sunnyvalecricketclub.org/

தமிழில்:சரஸ்வதி தியாகராஜன்
More

ரேவதி வாசனின் நாட்டிய அரங்கேற்றம்
அஞ்சனா, கல்பனாவின் பரதநாட்டிய அரங்கேற்றம்
லஷ்மிநாராயணா இசைப்பள்ளியின் பிள்ளையார் சதுர்த்தி
நந்தினி தாசரதி இசை அரங்கேற்றம்
திவ்யா சந்திரன் இசை அரங்கேற்றம்
வைஷ்ணவி ரெட்டியின் நடன அரங்கேற்றம்
Share: 




© Copyright 2020 Tamilonline