ரேவதி வாசனின் நாட்டிய அரங்கேற்றம் அஞ்சனா, கல்பனாவின் பரதநாட்டிய அரங்கேற்றம் லஷ்மிநாராயணா இசைப்பள்ளியின் பிள்ளையார் சதுர்த்தி நந்தினி தாசரதி இசை அரங்கேற்றம் திவ்யா சந்திரன் இசை அரங்கேற்றம் 2005 ரெய்சின்லாந்து கேடயக் கிரிக்கெட் தொடர்
|
|
|
ஆகஸ்ட் 21, 2005 அன்று ஜோலியட் (இலினாய்) மாக்னி·பிசண்ட் ரியால்டோ சதுக்க அரங்கில் (Magnificent Rialto Square Theatre) வைஷ்ணவி ரெட்டியின் நடன அரங்கேற்றம் நடந்தது.
வைஷ்ணவி ஹின்ட்ஸ்டேல் உயர்நிலைப் பள்ளியில் (Hindsdale High School) முதலாம் ஆண்டை முடித்துள்ளார்.
இவர் நிருத்யாஞ்சலி நாட்டியப் பள்ளியின் தலைவர் ஸ¤ஷ்மா அருண்குமாரின் மாணவி.
அரங்கேற்றத்தின் முதல் நடனமாக விஷ்ணுவின் பல்வேறு அவதாரங்களான ராமர், நரசிம்மர் மற்றும் கிருஷ்ணர் ஆகியோரைப் புகழும் 'ஜெய் ஜானகி ரமண' என்ற அன்னமாச்சார்யாவின் க்ருதிக்கு ஆடினார். தொடர்ந்து கிருஷ்ணரைத் துதிக்கும் அன்னமாச்சார்யாவின் 'கருணா நிதிம் கதாதரம்' என்ற சங்கீர்த்தனத்துக்கு பரதம் ஆடினார். இவற்றை மிகுந்த தேர்ச்சியுடனும் வசீகரத்துடனும் இவர் ஆடிய அழகே அழகு.
அடுத்து வந்த 'மனவி சேகொன' என்ற தஞ்சாவூர் பிரகதீசுவரரைப் பற்றிய வர்ணம் சேர்ந்தாற்போல் நாற்பது நிமிடங்கள் நடனம் ஆடும்படியாக இருந்தது. அதில் வரும் நாயகியாகவே மாறி பகவானிடம் பல விதங்களில் தன்னை ஏற்றுக்கொள்ளும்படி முறையிட்டது மிக அற்புதமாக இருந்தது. அவரது பாத அசைவுகளும், கைகளின் நளினமும் அழகான அபிநயமும் உன்னத மாக இருந்ததுடன் கலாஷேத்திரா பாணியை முத்திரையிட்டது.
அரங்கேற்றத்தின் இரண்டாவது பகுதி 'கோவர்த்தன கிரிதர' என்ற கீர்த்தனத் துடன் ஆரம்பித்தது. அடுத்து அம்பா பஞ்சரத்தினத்திலிருந்து ஒரு சுலோகத்திற்கு அபிநயித்த பின், சிங்கத்தின்மீது கம்பீரமாக வீற்றிருப்பவளும், அரக்கனான மகிஷா சுரனை வதம் செய்தவளும், சிவனாலும், முருகனாலும் துதிக்கப்பட்டவளுமான தேவியை வர்ணிக்கும் 'சிம்ஹாசன ஸ்திதே' என்ற கீர்த்தனத்திற்கு இவர் ஆடிய விதம் பார்வையாளர்களின் மனநிலையை உயர் நிலைக்குக் கொண்டு சென்றது.
மூன்றாவதாக 'ப்ரோசேவா ரெவருரா' என்ற கிருதிக்கு நடனம் ஆடினார். இதில் கஜேந்திரனைக் காப்பாற்றியது போல தன்னயும் கருணயுடன் காப்பாற்றுமாறு இராமபிரானிடம் பக்தன் இறைஞ்சுவதை அபிநயம் பிடித்தது மிக அழகாக இருந்தது. இறுதியாக, சிக்கலான பாத அசைவு களுடன், விரைவான அங்க அசைவு களுடனும் ஆடிய ராகஸ்ரீ தில்லானா சிவனைப் போற்றி பாடப்பட்டதாகும். |
|
இந்தியாவிலிருந்து வந்திருந்த பாமா விஸ்வேஸ்வரன் (வாய்ப்பாட்டு), மாயூரம் ஷங்கர் (மிருதங்கம்), சுகந்தி சேஷாத்ரி (வீணை), பசுமர்தி வெங்கடரமணன் (புல்லாங்குழல்) ஆகியோரின் திறமிக்க துணையைச் சொல்லியாக வேண்டும்.
குரு ஸ¤ஷ்மிதா அருண்குமாரின் சிறந்த நட்டுவாங்கமும், நிகழ்ச்சி வடிவமைப்பும் பாராட்டத் தக்கவை.
மிச்சிகனில் உள்ள ஹிந்து கோயில் ரிதம்ஸின் (Hindu Temple Rhythms) கலை இயக்குனர் சுதா சந்திரசேகர் இந்த நிகழ்ச்சிக்குத் தலமை தாங்கி வைஷ்ணவியின் நாட்டியத் திறமையைப் புகழ்ந்து பேசினார். முன்னாள் திரைப்பட நடிகை ராஜ சுலோசனாவும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
தமிழாக்கம்: சரஸ்வதி தியாகராஜன் |
|
|
More
ரேவதி வாசனின் நாட்டிய அரங்கேற்றம் அஞ்சனா, கல்பனாவின் பரதநாட்டிய அரங்கேற்றம் லஷ்மிநாராயணா இசைப்பள்ளியின் பிள்ளையார் சதுர்த்தி நந்தினி தாசரதி இசை அரங்கேற்றம் திவ்யா சந்திரன் இசை அரங்கேற்றம் 2005 ரெய்சின்லாந்து கேடயக் கிரிக்கெட் தொடர்
|
|
|
|
|
|
|