ஓட்ஸ் கட்லெட்
|
|
|
|
|
தேவையான பொருட்கள் ஓட்ஸ் - 2 கிண்ணம் புளி - சிறு எலுமிச்சை அளவு பச்சைமிளகாய் அல்லது மோர்மிளகாய் - 5 பெருங்காயம் - சிறிதளவு கறிவேப்பிலை - கொஞ்சம் கொத்துமல்லி - சிறிதளவு கடுகு - 1 தேக்கரண்டி உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி எண்ணெய் - தாளிக்க உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை புளியைக் கெட்டியாகக் கரைத்து ஓட்ஸில் ஊற்றி உப்புப்போட்டு பத்துநிமிடம் ஊறவைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், பச்சைமிளகாய் அல்லது மோர்மிளகாய் தாளித்து, ஊறவைத்துள்ள ஓட்ஸ் கலவையைக் கொட்டி நன்றாகக் கிளறவும். வெந்து உப்புமா பதம் வந்தவுடன் இறக்கி கறிவேப்பிலை, கொத்துமல்லி பொடியாக நறுக்கி உள்ளதைப் போட்டு எடுத்துச் சாப்பிடலாம். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கியும் இதில் போட்டுச் செய்யலாம். சுவையாக இருக்கும். |
|
தங்கம் ராமஸ்வாமி, பிரிட்ஜ் வாட்டர், நியூஜெர்ஸி |
|
|
More
ஓட்ஸ் கட்லெட்
|
|
|
|
|
|
|