இரண்டாமிடம்: பாதாம் கீன்வா புலாவ் மூன்றாமிடம்: கீன்வா மஞ்சூரியன்
|
|
கிச்சன் கில்லாடி வெற்றிக் குறிப்புகள் |
|
- |டிசம்பர் 2015| |
|
|
|
|
|
புற்றுநோய் அமைப்பு அறக்கட்டளை (Cancer Institute Foundation) கலிஃபோர்னியா வளைகுடாப் பகுதியில் நடத்திய போட்டியில் பரிசுகளைத் தட்டிச்சென்ற அயிட்டங்களின் ரகசியம் இங்கே பரிமாறப்படுகிறது.
முதலிடம்: லீக் சூப் (Leek Soup), கீன்வா டபோலே (Quinoa Taboleh)
லீக் சூப் தேவையான பொருட்கள்: லீக், கொத்துமல்லி தழை, பிராக்கோலி, காலிஃப்ளவர், மிளகு, உப்பு (தேவையான அளவு), எலுமிச்சை, முந்திரி, ஓட்ஸ் (அ) சாமை
செய்முறை: லீக், கொத்துமல்லித் தழை, பிராக்கோலி ஆகியவற்றை லேசாக வதக்கிக் கொள்ளவும். காலிஃப்ளவரை வேகவைத்துக் கொள்ளவும். அனைத்தையும் சேர்த்து மிக்சியில் அரைக்கவும். குளிர்ந்த பிறகு எலுமிச்சை, மிளகு, உப்பு சேர்க்கவும். தேவையானால் ஒட்ஸ் அல்லது சாமை சேர்த்துக் கொள்ளலாம். |
|
கீன்வா டபோலே தேவையான பொருட்கள்: பலவண்ண சாமை, பார்ஸ்லி, வெள்ளரி, லீக்ஸ், தக்காளி, ஆலிவ் எண்ணெய், இஞ்சி, புதினா, எலுமிச்சை, கிராம்பு, உப்பு
செய்முறை: சாமையை சாதமாகச் சமைத்துக் கொள்ளவும். பார்ஸ்லி, வெள்ளரி, லீக்ஸ், தக்காளி ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெட்டிய காய்கறிகளைச் சாமையுடன் சேர்த்துக் கொள்ளவும். தேவையான அளவு ஆலிவ் எண்ணெய், சிறிதளவு எலுமிச்சை, மிளகு, இஞ்சி, புதினா சேர்த்து கலக்கவும். சிறிதளவு கிராம்பு சேர்த்துக் கொள்ளலாம். தேவைப்பட்டால் உப்புச் சேர்த்துக்கொள்ளுங்கள். மாதுளம்பழச்சாறும், மாம்பழத்துண்டுகளும் சுவைக்காகச் சேர்க்கலாம். நன்றாகக் கலந்தால் கீன்வா டபோலே ரெடி!
சித்ரா, தனலக்ஷ்மி, ஸ்ரீனிவாசன் |
|
|
More
இரண்டாமிடம்: பாதாம் கீன்வா புலாவ் மூன்றாமிடம்: கீன்வா மஞ்சூரியன்
|
|
|
|
|
|
|