டாலஸ்: மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்க் கல்விக்கழக ஆண்டு விழா போலிங்ப்ரூக்: முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஸ்ரீக்ருபா: 'ராமம் குணாபி ராமம்' நாட்டிய நாடகம் மிச்சிகன்: 'சரோவர்' இசைத்திருவிழா ந்ருத்யகல்யா: 'பஞ்சகன்யா' சங்கம் ஆர்ட்ஸ்: 'சங்கிலிகள்' - நிழல்களின் காதல் கதை மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்கா-கனடா விஜயம் சியாட்டில்: 'சிதம்பர ரகசியம்' நாடகம்
|
|
|
|
|
ஜூலை 3, 2015 வெள்ளிக்கிழமையன்று FeTNA தமிழ் விழாவில் கல்கியின் 'சிவகாமியின் சபதம்' நாடகம் மேடையேறுகிறது. பொன்னியின் செல்வனை பிரம்மாண்டமான வெற்றிப் படைப்பாக வழங்கிய அமிராமி கலைமன்றத்தின் பாகீரதி சேஷப்பன், ஸ்ரீதரன் மைனர், வேணு சுப்பிரமணியன் ஆகியோர் மீண்டும் இதற்காக இணைந்துள்ளனர். வளைகுடாப் பகுதி தமிழ் மன்றத்தின் சார்பில் நடக்கவிருக்கும் வட அமெரிக்கத் தமிழ்ப் பேரவையின் தமிழ் விழாவின் (Fetna-2015) சுவைமிகு அம்சமாக San Jose Civic Auditorium அரங்கில் நடைபெற உள்ளது. விரிகுடாப் பகுதி தமிழர் திறமைகளை உலகோர் அறியும் விதமாக, உள்ளூர்க் கலைஞர்களை வைத்தே தயாரிக்கப்பட்டுள்ளது சிவகாமியின் சபதம். சிறப்பான காட்சிகள், வசனங்கள், இசை, நடனங்கள் என்று அபாரமாக நாடகமாக்கப் பட்டுள்ளது கல்கியின் இந்த வரலாற்றுப் புதினம். மாமல்லரையும், சிவகாமியையும், நாகநந்தியையும் சந்திக்கும் வாய்ப்பு, இதோ கையருகில்! குடும்பம் உற்றார் உறவினரோடு ஃபெட்னா-2015 கருத்தரங்கில் கலந்துகொண்டு, நாடகத்தையும் கண்டுகளியுங்கள். |
|
கதிரவன் எழில்மன்னன் |
|
|
More