நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம் நடன விழா பாரதி தமிழ்ச் சங்கம்: பொங்கல் நிகழ்ச்சி 'அன்னபூர்ணா' ஃப்ரீமாண்ட் துவக்கப்பள்ளியில் இந்திய கலாசார வாரம் ஹிந்து டெம்பிள் ரிதம்ஸ்: 'தாண்டவ்' GATS CMA தமிழ்ப் பள்ளியில் குடியரசு தினம் பாரதிய சமாஜம்: நிதி திரட்டும் நிகழ்ச்சி அட்லாண்டா தமிழ் சபையில் மகளிர் சிறப்பு ஆராதனை
|
|
|
|
பிப்ரவரி 12, 2011 அன்று நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் விழா செம்ஸ்ஃபோர்டு மேல்நிலைப்பள்ளி அரங்கில் நடந்தது. கிட்டத்தட்ட ஆயிரம் பேர் திரண்டு வந்திருந்து சிறப்பித்தனர். தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய நிகழ்ச்சியில் சங்கத்தின் சார்பாக NETS தலைவி வித்யா கல்யாணராமன் வரவேற்புரை அளித்து நிழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். முருகப் பெருமானைப் பற்றிய வாழ்த்துப் பாடலுடன் ஆரம்பித்து பல்வகைக் கலை நிகழ்ச்சிகள் தொடர்ந்தன. பாரம்பரிய இசைப்பாடல்கள், பரதம், நாடகம், நாட்டுப்புற நடனம், மெல்லிசைப் பாடல்கள், வாத்திய இசை, சினிமாப் பாடல்களுக்குத் தொகுப்பு நடனம், பாரதியார் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சிறார் முதல் முதியோர்வரை பங்கு கொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர். முக்கியமாக 'அமெரிக்காவில் நாட்டாமை' நகைச்சுவை நாடகம் அரங்கை சிரிப்பால் அதிரவைத்தது. 'அதியமானும் ஔவையும்' மற்றும் 'பீர்பாலின் புத்திசாலித்தனம்' ஆகிய நாடகங்கள் சிந்திக்க வைத்தன. 'யமனுக்கு யமன்' நாடகம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அருட்பெருஞ்சோதியின் திருவருட்பா அருமை.
விழா நிகழ்ச்சிகளில் 180 பேர் பங்கேற்றுக் கலக்கினர். நிகழ்ச்சிகளை அனுசுயா, பாண்டியன் மற்றும் நவீனா சண்முகம், மலர் செந்திலுடன் தொகுத்தளித்தனர். NETS தலைவர் தமிழ்ச்சங்க நிர்வாகிகளை அறிமுகப்படுத்தினார். பங்கேற்றவர்களுக்கு நினைவுக் கோப்பைகள் வழங்கப்பட்டன. சுபா அவர்களின் நன்றியுரைடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. |
|
பூங்கோதை கோவிந்தராஜ், மசாசூசெட்ஸ |
|
|
More