நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம் நடன விழா பாரதி தமிழ்ச் சங்கம்: பொங்கல் நிகழ்ச்சி 'அன்னபூர்ணா' ஹிந்து டெம்பிள் ரிதம்ஸ்: 'தாண்டவ்' நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம்: பொங்கல் விழா GATS CMA தமிழ்ப் பள்ளியில் குடியரசு தினம் பாரதிய சமாஜம்: நிதி திரட்டும் நிகழ்ச்சி அட்லாண்டா தமிழ் சபையில் மகளிர் சிறப்பு ஆராதனை
|
|
|
|
2011 மார்ச் 14 முதல் 18 வரை ஃப்ரீமாண்ட் இர்விங்ஸ்டன் பகுதியில் உள்ள ஹர்ஷ் துவக்கப்பள்ளி இந்தியக் கலாசார விழாவைக் கொண்டாடியது. பள்ளி முதல்வர் திருமதி ஜெனிஃபர் கேசி இந்தக் கொண்டாட்டத்திற்கு உறுதுணையாக இருந்தார். இந்தியக் கலைப் பொருட்கள், இசைக்கருவிகள், ஆடைகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. தினமும் இந்தியக் கலை நிகழ்ச்சிகள், மாநிலவாரி உணவுகள், கைகளில் மெஹந்தி இடுதல், சப்பாத்தி, தோசை செய்முறை, ஸ்லைட் ஷோ என்று இந்தியப் பெற்றோர்கள் அசத்தினர்.
பள்ளி முதல்வர் அவர்கள் சேலை அணிந்துகொண்டு இந்தியக் கலை நிகழ்ச்சிகளுக்கு முன்னுரை தந்தது வியப்பைத் தந்தது. பிற ஆசிரியர்களும் பள்ளிப் பிஞ்சுக் குழந்தைகளும் இந்திய உடை அணிந்து பாலிவுட் நடனம் ஆடினர். நடனம் கற்பித்த வர்ஷா குப்தா பாராட்டுக்குரியவர். கலைக்கோவில் நடனப்பள்ளி நடத்திய பரதநாட்டிய நடனம் அருமை. ஆசிரியர்களுக்கு இந்தியப் பெற்றோர்கள் அளித்த விருந்தோம்பல் வெகு சிறப்பு. |
|
சுஜப்ரியா வேணுகோபால், ஃப்ரீமாண்ட், கலிபோர்னியா |
|
|
More