Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | சிறப்புப் பார்வை | முன்னோடி | வாசகர்கடிதம் | கதிரவனை கேளுங்கள் | மேலோர் வாழ்வில் | சமயம்
Tamil Unicode / English Search
Comments
Seethaalakshmi (India)

Comments Home
Comment by Seethaalakshmi (1)
Article: ம.வே.சிவகுமார்
Category: எழுத்தாளர் (Feb 2014) Posted On: Mar 24, 2014
மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு, வணக்கம். திரு ம.வே.சிவகுமார் பற்றி, திரு பா.இராகவன் அவர்கள் கூறியதாக நீங்கள் குறிப்பிட்டிருக்கும் வரிகள் - என்னால் www.arusuvai.com என்ற இணையதளத்தில் - நான் எழுதிய ‘படித்தவை ரசித்தவை’ பகுதியில் எழுதப்பட்டவை. லிங்க் கீழே கொடுத்துள்ளேன்: http://www.arusuvai.com/tamil/node/17315 //எழுத்தாளர் ம.வே.சிவகுமார். இவரது ”பாப்கார்ன் கனவுகள்” என்ற தொடர்கதை கல்கியில் வெளிவந்தது. லைம் லைட் என்ற வெளிச்சத்துக்கு வந்து, பிரபலமாக வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கும். சராசரிக்கும் மேலேயே ரசிகனாக இருக்கும் ஒருவன், பிரபலமாக ஆவதற்கு முயற்சித்தால் என்ன ஆகும்? வங்கியில் வேலை பார்க்கும் இளைஞன், சினிமாவில் நடிக்க முயற்சிக்கிறான். நகைச்சுவையும் யதார்த்தமும் கலந்த சிறப்பான படைப்பு இது. மனைவியின் நகைகளை அடகு வைத்து விடுகிறான் கணவன். மாமனார் எல்லாவற்றையும் மீட்டுத் தருகிறார். நகைகளை அணிந்து கொண்டு, மனைவி நமஸ்காரம் செய்கிறாள். “ நகைகளுடன் சேர்த்து, இத்தனை நாள் இந்த அழகையும் அல்லவா அடகு வைத்து விட்டோம்” என்ற குற்ற உணர்வு ஏற்படுவதாக எழுதியிருந்தது அருமை. இவரது சிறுகதைத் தொகுப்பு “வாத்தியார்”. கொஞ்சம் தைரியமான எழுத்து என்றே சொல்ல வேண்டும். எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன் பற்றி எழுதியிருப்பார். ஒரு நடிகனின் ரசிகனாக இருக்கும்போது, அவரது போட்டியாளராக இருக்கும் இன்னொரு நடிகனை நாம் கிண்டல் செய்யவும், வெறுக்கவும் வேண்டும் என்று பழக்கப்படுத்திக் கொள்கிறோம். ஆனால் நம்மால் கிண்டல் செய்யப்பட்டவர், அவரது தகுதியை, சிறப்பை, வெளிப்படுத்தும்போது, ஏன் அவர் அவ்வளவு பெரிய ஆளாக இருக்கிறார், நாம் ஏன் அவரை விமரிசனம் செய்யும் இடத்திலேயே தங்கி விடுகிறோம் என்பது புரிய ஆரம்பிக்கிறது. எம்.ஜி.ஆர். அவர்களை ஒரு காரக்டராகவே ஆக்கி, எழுதிய சிறுகதை இது. இவரது இன்னொரு நாவல் ”வேடந்தாங்கல்”. நான் இந்த நாவலை முழுவதுமாக படிக்கவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில அத்தியாயங்கள் மட்டுமே படிக்க முடிந்தது. பெரியப்பாவின் வீட்டில் படிப்பதற்காக கொண்டு வந்து விடப்படும் சிறுவனின் பார்வையில் சொல்லப்பட்ட கதை இது. கண்ணாடி போட்டுக் கொண்டு, இடுப்பில் கை வைத்தவாறு, பூஜை அறை படத்தில் இருக்கும் கிருஷ்ணரைப் போல சிரிக்கும் பெரியப்பா, அப்பளத்தை ஒடித்து, அதை ஸ்பூன் போல உபயோகித்து, சாம்பார் சாதத்தை எடுத்து சாப்பிட்டவாறே “இது அப்பள ஸ்பூன்” என்று சொல்வது, இதெல்லாம் நினைவிருக்கிறது. வேடந்தாங்கல் என்ற தலைப்பைப் படித்த போது, வெவ்வேறு இடங்களில் இருந்து வரும் பறவைகளின் சரணாலயமாக பெரியப்பாவின் வீட்டைப் பற்றி சொல்லப் போகிறார் என்று நினைத்தேன். ஆனால் கதையின் முடிவில், இனி எப்போதும் நிஜத்தை சொல்லப் போவதில்லை, வேடம் தாங்கிக் கொண்டே இருப்பேன், வேடம் + தாங்கல் என்று முடித்து, வியக்க வைத்தார்.// தயவு செய்து இதைப் படித்துப் பார்த்து, விளக்கம் தரும்படி, கேட்டுக் கொள்கிறேன். அன்புடன் சீதாலஷ்மி சுப்ரமணியம்





© Copyright 2020 Tamilonline