Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | கவிதைப்பந்தல்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
கரண் நடிக்கும் ‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்'
விக்னேஷ் நடிக்கும் ‘ஈசா'
விஷால் நடிக்கும் ‘தீராத விளையாட்டுப் பிள்ளை'
ஜேம்ஸ் வசந்தனின் டிராஷ் இசை
‘சிவகிரி'யில் சிவகிரி
‘மத்திய சென்னை'யில் பிரகாஷ் ராஜ்
மதுமிதாவின் 'கொல கொலயா முந்திரிக்கா'
- அரவிந்த்|ஜூலை 2009|
Share:
Click Here Enlarge‘வல்லமை தாராயோ' வெற்றிப்படத்தின் இயக்குநர் மதுமிதா, நீண்ட நாட்களுக்குப் பிறகு இயக்கும் படம் 'கொலகொலயா முந்திரிக்கா'. முழுக்க முழுக்க நகைச்சுவைச் சித்திரமாக உருவாகும் இந்தப் படத்துக்கு கதை, வசனத்தை கிரேசிமோகன் எழுத, திரைக்கதை எழுதி இயக்குகிறார் மதுமிதா. ‘பொய் சொல்லப் போறோம்' பட நாயகன் கார்த்திக் குமார் இதன் கதாநாயகன். ஜோடியாக, ஷிகா என்ற புதுமுகம். இவர்களுடன் எம்.எஸ். பாஸ்கர், வாசு விக்ரம், கோட்டா சீனிவாசராவ், ஆனந்த்ராஜ் ஆகியோர் நடிக்கின்றனர். ‌'வெண்ணிலா கபடி குழு' படத்திற்கு இசையமைத்த செல்வகணேஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். மதுமிதாவின் கணவர் விஜய் வெங்கட்ராமன் டெக்னிக்கல் டைரக்டர் மற்றும் எடிட்டிங் பொறுப்புகளை கவனிக்கிறார். திரிசக்தி சுந்தரராமன் படத்தைத் தயாரிக்கிறார்.

“எத்தனையோ நகைச்சுவைப் படங்கள் வந்தாலும் ‘காதலிக்க நேரமில்லை' படத்தை இதுவரை எந்த படமும் தொடமுடியவில்லை. அந்த தூரத்தை இப்படத்தின் மூலம் தொட முயற்சி செய்திருக்கிறோம். ‘பஞ்சதந்திரம்' மாதிரி ஒவ்வொரு காட்சியும் நகைச்சுவையாக இருக்கும்” என்கிறார் கிரேசி மோகன். “முழுக்க முழுக்க காமெடி த்ரில்லராகத்தான் இந்த ஸ்கிரிப்டை வடிவமைத்திருக்கிறோம். வல்லமை தாராயோ படத்தின் ஸ்டைல் துளியுமில்லாத ஒரு திரைக்கதையை இதில் பார்க்கலாம்” என்கிறார் மதுமிதா. இப்படத்தின் உதவி இயக்குநர்கள் அனைவரும் பெண்களே என்பது கொசுறு தகவல்.
அரவிந்த்
More

கரண் நடிக்கும் ‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்'
விக்னேஷ் நடிக்கும் ‘ஈசா'
விஷால் நடிக்கும் ‘தீராத விளையாட்டுப் பிள்ளை'
ஜேம்ஸ் வசந்தனின் டிராஷ் இசை
‘சிவகிரி'யில் சிவகிரி
‘மத்திய சென்னை'யில் பிரகாஷ் ராஜ்
Share: 




© Copyright 2020 Tamilonline