வெந்தயக் கீரை பொங்கல் வெந்தயக் கீரை சப்பாத்தி வெந்தயக்கீரை பாலாடை கட்டி சாதம் (Methi paneer rice) வெந்தயக் கீரை உருளைக்கிழங்கு கறி வெந்தயக் கீரை உசிலியல் வெந்தய தோசை வெந்தய இட்டலி
|
|
|
தேவையான பொருட்கள்
பச்சரிசி - 1 கிண்ணம் துவரம் பருப்பு - 1/2 கிண்ணம் கடலைப் பருப்பு - 1/2 கிண்ணம் உளுத்தம் பருப்பு - 1 மேசைக்கரண்டி நறுக்கிய வெந்தயக் கீரை - 1/4 கிண்ணம் பெருங்காயம் - சிறிதளவு மிளகாய் வற்றல் - 5 உப்பு - தேவைக்கேற்ப |
|
செய்முறை
பச்சரிசி, துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றைக் கழுவி ஒன்றாகத் தண்ணீரில் மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் நீரை வடித்துவிட்டு, பெருங்காயம், மிளகாய் வற்றல், உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கரகரப்பாக அரைக்கவும். சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். நறுக்கிய வெந்தய இலைகளை மாவில் கலக்கவும். பின்னர் தோசை வார்ப்பது போலவே ஆனால் சற்று கனமாகத் தட்டவும். தோசைக்கு விடுவதை விட அடைக்குச் சிறிது கூடுதலாக எண்ணெய் விட்டால் நன்றாக வேகும். இரண்டு புறமும் வெந்ததும் எடுக்கவும். நன்றாக வேகாவிட்டால் செரிப்பது கடினம்.
குறிப்பு: மாவுடன் துறுவிய தேங்காய் சேர்த்தும் வார்க்கலாம். வெங்காயம் சேர்த்தால் வெந்தய இலைகளின் மணம் குறைந்து விடும். அடையில் அரிசிமட்டும் சேர்க்காமல் செய்து பாருங்கள். ருசியாக இருப்பதுடன் உண்ணும் மாவுச்சத்து (Carbohydrate) அளவும் குறையும்.
சரஸ்வதி தியாகராஜன் |
|
|
More
வெந்தயக் கீரை பொங்கல் வெந்தயக் கீரை சப்பாத்தி வெந்தயக்கீரை பாலாடை கட்டி சாதம் (Methi paneer rice) வெந்தயக் கீரை உருளைக்கிழங்கு கறி வெந்தயக் கீரை உசிலியல் வெந்தய தோசை வெந்தய இட்டலி
|
|
|
|
|
|
|