அவல் உப்புமா பருப்பு உசிலி உப்புமா உசிலிஉப்புமா ஜவ்வரிசி உப்புமா
|
|
|
சாயங்காலவேளையில் பள்ளிக்கூடத்திலிருந்து இன்னிக்கு என்ன டிபன் என்று கேட்டுக்கொண்டே வரும் குழந்தைகளிடம் 'உப்புமாதான் டிபன் என்றால் அவ்வளவுதான்... சப்பென்று ஆகிவிடுவார்கள்... இன்றைய குழந்¨தைகளுக்கும், ஏன் பெரியவர் களுக்கும் பிடித்தவகையில் விதவிதமான உப்புமாக்கள் செய்யலாம்... சாப்பிடுவதற்கு மிகவும் நன்றாக இருக்கும்...
விதவிதமான உப்புமா வகைகளை நீங்களும் உங்கள் சமையலறையில் செய்து பாருங்களேன்...
பிரட் உப்புமா
பசித்து வரும் குழந்தைகளுக்கும், திடீரென்று வரும் விருந்தாளிகளுக்கும் கணநேரத்தில் தயாரித்துக் கொடுக்கும் வகையில் மிக எளிமையாக செய்து முடிக்கக் கூடியது பிரட் உப்புமா! சாப்பிடுவதற்கு ருசியாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
பிரட் துண்டுகள் - 15 வெங்காயம் - 1 (மீடியம் சைஸ்) தக்காளி - 1 உருளைக்கிழங்கு - 1 (நீளமாக நறுக்கியது) பச்சை பட்டாணி - கைப் பிடிஅளவு பச்சை மிளகாய் - 2 உப்பு - காய்கறிகளுக்கு மட்டும் குறைந்த அளவு போதும் கொத்தமல்லி, கறிவேப்பிலை - பொடியாக நறுக்கியது கடுகு - ஒரு டேபிள் ஸ்பூன் பெருங்காய பவுடர் - 1/2 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன் |
|
செய்முறை
முதலில் பிரட் துண்டுகளை நன்றாக உதிர்த்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு மிதமான சூட்டில் அடுப்பை எறியவிடவும்.
எண்ணெய் காய்ந்ததும் தயாராக வைத்துள்ள கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயப்பவுடர் ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்
கடுகு வெடித்து உளுத்தம் பருப்பு பொன்நிறமாக வந்தவுடன் தயாராக வைத்துள்ள வெங்காயம், பட்டாணி, பச்சைமிளகாய் மற்றும் காய்கறிகளை போட்டு நன்றாக வதக்கவும்.
காய்கறிகள் நன்றாக வதங்கிய பிறகு தேவையான அளவு உப்பு, மஞ்சள் பொடி போட்டு நன்றாகக் கிளறவும்.
காய்கறிகள் சுருளாக வதங்கியவுடன், உதிர்த்து வைத்துள்ள பிரட் துண்டுகளை அதில் போட்டு நன்றாகக் கிளறிவிடவும்.
அடுப்பின் தீயை மெல்ல எரியவிடவும்.
பிரட்துண்டு காய்கறிகளுடன் சேர்ந்து உதிர் உதிராக வரும்.அடிபிடித்துக் கொள்ளாமல் கிளறவும்.
நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி, கறிவேப்பிலை யை தூவவும்.
பிரட் உப்புமா ரெடி
குறிப்பு: காய்கறிகளுக்கு மட்டும் வேண்டும் அளவு உப்பு போடவும். ஏனென்றால் பிரட்டில் ஏற்கெனவே உப்பு இருக்கும்.
கேடிஸ்ரீ |
|
|
More
அவல் உப்புமா பருப்பு உசிலி உப்புமா உசிலிஉப்புமா ஜவ்வரிசி உப்புமா
|
|
|
|
|
|
|