கத்தரிக்காய் கட்லெட்
|
|
|
|
தேவையான பொருட்கள் கத்தரிக்காய் - 2 வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 1/2 கிண்ணம் துவரம்பருப்பு (வேகவைத்தது) - 1/2 கிண்ணம் தேங்காய்த்துருவல் - 1/2 கிண்ணம் பச்சை மிளகாய் - 4 இஞ்சி - சிறிய துண்டு வெங்காயம் - சிறிதளவு எலுமிச்சம்பழம் - 1 கடுகு - ஒரு தேக்கரண்டி உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி கறிவேப்பிலை - சிறிதளவு கொத்தமல்லி - சிறிதளவு மஞ்சள் - 1 தேக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப எண்ணெய் - தாளிக்க |
|
செய்முறை கத்தரிக்காயைத் துண்டுகளாக நறுக்கி வதக்கி நன்றாக மசித்துக் கொள்ளவும். வெங்காயத்தையும் போட்டு வதக்கவும். மசித்த கத்திரிக்காயில் உப்புப் போடவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, மிளகாய், இஞ்சி, பெருங்காயம் தாளித்து மஞ்சள் பொடி போட்டு மசித்த கத்தரிக்காயுடன் சேர்க்கவும். வெந்த பருப்பைச் சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டுக் கொதிக்கவைத்து தேங்காய்த் துருவல் வறுத்துப் போட்டு இறக்கவும். கறிவேப்பிலை, கொத்துமல்லி போடவும். எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து கலந்து சாப்பிடவும். இது மிகவும் சுவையான மசியல்.
தங்கம் ராமசாமி, நியூ ஜெர்சி |
|
|
More
கத்தரிக்காய் கட்லெட்
|
|
|
|
|
|
|