சுரைக்காய் முத்தியா
|
|
|
|
உந்தியூ
தேவையான பொருட்கள் வாழைக்காய் - 1 சிறிய உருளைக்கிழங்கு - 6 சேனைக்கிழங்கு - 1 சிறு துண்டு சர்க்கரைவள்ளிக் கிழங்கு - 2 அவரைக்காய் - 100 கிராம் மொச்சைப்பருப்பு - 1/4 கிண்ணம் வெந்தயக் கீரை (நறுக்கியது) - 1 கிண்ணம் கொத்துமல்லி (நறுக்கியது) - 1/2 கிண்ணம் தேங்காய்த்துருவல் - 1 கிண்ணம் முந்திரிப்பருப்பு - 8 வேர்க்கடலை - 1/4 கிண்ணம் எள் - 2 மேசைக்கரண்டி கொத்துமல்லி விதை பொடி - 2 மேசைக்கரண்டி எலுமிச்சம்பழம் - 1 மூடி கடலைமாவு - 1/2 கிண்ணம் கோதுமைமாவு - 1/4 கிண்ணம் மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி மஞ்சள்தூள் - 2 தேக்கரண்டி ஓமம் - 1 மேசைக்கரண்டி கரம் மசாலா - 2 தேக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப எண்ணெய் - பொரிக்க சர்க்கரை - 1 தேக்கரண்டி இஞ்சி - சிறிதளவு பச்சை மிளகாய் - 2 கத்திரிக்காய் - 6 பெருங்காயம்
செய்முறை ஒரு கிண்ணத்தில் கடலைமாவு, கோதுமைமாவு, உப்பு, மஞ்சள்பொடி, வெந்தயக்கீரை, கொத்துமல்லி, மிளகாய்ப்பொடி, மஞ்சள்பொடி, கொத்துமல்லி விதை பொடி, சர்க்கரை எல்லாம் போட்டு இரண்டு தேக்கரண்டி எண்ணெய் விட்டுக் கலந்து, தேவையானால் துளி தண்ணீரும் விட்டுப் பிசையவும். இதை நீள உருண்டைகளாக உருட்டி சிறு சிறு பக்கோடா போலச் செய்து எண்ணெயில் பொரிக்கவும். முத்தியா என்பது இதன் பெயர்.
தோல்நீக்கிய உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்குடன் சர்க்கரை வள்ளியையும் சிறு துண்டுகளாக நறுக்கவும். ஒரு கிண்ணத்தில் தேங்காய்த்துருவல், பெருங்காயம், உப்பு, மஞ்சள்பொடி, கரம் மசாலாப் பொடி, காரப்பொடி, சிறியதாய் நறுக்கிய மிளகாய், முந்திரி, வேர்க்கடலை, எள்ளு இவற்றை வறுத்துப் பொடிசெய்து போடவும். கொத்துமல்லி, துளி சர்க்கரை, கொத்துமல்லி விதைப் பொடி இவற்றோடு கலந்து கத்திரிக்காயை நான்காகக் கீறி முழுவதும் நறுக்காமல் பொடி அடைக்கிற மாதிரி இந்தக் கலவையை அடைக்கவும். அதேபோல உருளைக்கிழங்கிலும், அதே கலவையை அடைத்துக் கொள்ளவும். அவரைக்காயை உரித்துக் கொண்டு வாணலியில் எண்ணெய் விட்டு ஓமம், பெருங்காயம் எண்ணெய் விட்டுப் பொரிந்தவுடன் அவரை, மொச்சைப் பருப்புகளைப் போட்டுச் சிறிது வதக்கி மேலாக உருளை, சேனை, சர்க்கரை வள்ளிக்கிழங்கும் போட்டு, சிறிது சர்க்கரை, உப்பு, காரப்பொடி போடவும். வாழைக்காயைத் தோல் சீவாமல் வில்லையாக நறுக்கிப் போட்டுக் குக்கரில் எல்லாவற்றையும் போட்டுப் பத்துநிமிடம் வேகவிடவும்.
பிறகு திறந்து, அதில் முத்தியா உருண்டை, முந்திரிப் பொடி, நறுக்கிய இஞ்சி, மீதியுள்ள கொத்துமல்லி, தேங்காய் எல்லாம் போட்டு எலுமிச்சைச் சாறு விட்டு மூடி ஆறு அல்லது ஏழு நிமிடங்கள் குக்கரில் வேகவிடவும். எடுத்துப் பரிமாறவும். குஜராத்தில் இது ஒரு விசேஷமான டிஷ். அற்புதமாக இருக்கும். |
|
தங்கம் ராமசாமி, பிரிட்ஜ்வாட்டர், நியூ ஜெர்சி |
|
|
More
சுரைக்காய் முத்தியா
|
|
|
|
|
|
|