சுண்டைக்காய் பொரிச்ச கூட்டு சுண்டைக்காய் வற்றல் மிளகு குழம்பு சுண்டைக்காய் வற்றல் மோர்க்குழம்பு சுண்டைக்காய் வற்றல் பொடி சுண்டைக்காய் வற்றல் தொகையல் ஐங்காயப் பொடி சுண்டைக்காய் வற்றல் தயிர்பச்சடி மொகல் பரோட்டா பன்னீர் கிரேவி
|
|
|
சுண்டைக்காய் கசப்பு ருசி உடையது. வயிற்றிலுள்ள கிருமிகளை எடுக்கவல்லது. வயிற்றுக்கு இதமளிக்கக்கூடியது. கடுமையான ஜலதோஷத்திற்கு சுண்டைக்காய் பொடி, வறுத்த சுண்டைக்காய் வற்றல், சுண்டைக்காய் குழம்பு போன்ற உணவு வகைகளை ருசியுடன் சாப்பிட மார்பு சளி நீங்கும். சர்க்கரை நோயுள்ளவர்கள் வேப்பம்பூ, சுண்டைக்காய், பாகற்காய் போன்ற கசப்பு சுவையுள்ளவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளு வேண்டும். ருசியான உணவாகவும், இதமான மருந்தாகவும் விளங்கும் சுண்டைக்காயை பலவிதங்களில் சமையல் செய்து சுவையுடன் சாப்பிடலாம்.
''சுண்டைக்காய் சமாச்சாரம்'' என்று அலட்சியமாக எண்ணி, ''சுண்டைக்காய் கசப்பு'' என்ற தவறான கருத்தினால் அதை உண்ணாமல் இருக்கும் அனைவரும் கீழே கொடுத்துள்ள வகையில் சமையல் செய்து சாப்பிட்டதும், ''சுவையான சுண்டைக்காய்'' என்ற உண்மையை உணர்வார்கள் என்பது உறுதி.
சுண்டைக்காய் பிட்லை
தேவையான பொருட்கள்
பச்சை சுண்டைக்காய் - 3/4 ஆழாக்கு துவரம் பருப்பு - 1/2 ஆழாக்கு புளி - சிறு எலுமிச்சைஅளவு தக்காளி - 1 உப்பு - தேவையான அளவு சாம்பார் பொடி - 2 ஸ்பூன் கடலை பருப்பு - 2 ஸ்பூன் தனியா - 1 ஸ்பூன் மிளகாய் வற்றல் - 2 தேங்காய் துருவல் - 4 ஸ்பூன் பெருங்காயம் - சிறிது வெல்லப்பொடி-ருசிக்கு - 1 ஸ்பூன் பச்சை கொத்தமல்லி - சிறிது தேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன் கடுகு - 1 ஸ்பூன் |
|
செய்முறை
துவரம் பருப்பை குக்கரில் குழைய வேகவிடவும். புளி, தக்காளி இவற்றை நன்கு கரைத்து கனமாக பாத்திரம் விடவும். உப்பு ,சாம்பார் பொடி போடவும். சுண்டைக்காயை நன்றாக அலம்பி காம்பு ஆய்ந்து சப்பாத்தி குழவியால் லேசாக நசுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடலை பருப்பு, மிளகாய் வற்றல், தனியா, பெருங்காயம் இவற்றை வறுத்து தேங்காயுடன் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். நசுக்கிய சுண்டைக்காயை எண்ணெயில் லேசாக வதக்கி குழம்பில் போட்டு 10 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
வெந்த பருப்பு, மிக்ஸியில் அரைத்த விழுது இவற்றை கொதிக்கும் குழம்பில் விட்டு கிளறி மேலும் 2, 3 நிமிடங்கள் கொதிக்கவிடவும். வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து குழம்பில் போடவும். 2 ஸ்பூன் தேங்காய் தூளை வறுத்துப் போடலாம். கெத்தமல்லி கிள்ளி போட்டு மூடிவைக்கவும்.
இந்திரா காசிநாதன் |
|
|
More
சுண்டைக்காய் பொரிச்ச கூட்டு சுண்டைக்காய் வற்றல் மிளகு குழம்பு சுண்டைக்காய் வற்றல் மோர்க்குழம்பு சுண்டைக்காய் வற்றல் பொடி சுண்டைக்காய் வற்றல் தொகையல் ஐங்காயப் பொடி சுண்டைக்காய் வற்றல் தயிர்பச்சடி மொகல் பரோட்டா பன்னீர் கிரேவி
|
|
|
|
|
|
|