பொறியல் வகைகள் - பாகற்காய் தித்திப்பு பொறியல் பொறியல் வகைகள் - பாகற்காய் ஸ்ட·ப் குழம்பு வகைகள் - பாகற்காய் அரைப்புளி குழம்பு குழம்பு வகைகள் - பாகற்காய் பிட்லை கிறிஸ்துமஸ் கேக் (·புரூட் & நட் ) ·புரூட்டி நட்டி மைக்ரோவேவ் கேக்
|
|
|
பொறியல் வகைகள் - பாகற்காய் ரோஸ்ட்
தேவையான பொருட்கள்
பாகற்காய் - 1 பவுண்டு எண்ணெய் - 1 கரண்டி மிளகாய் வற்றல் - 5 புளித் தண்ணீர் - 1/2 கரண்டி மஞ்சள் பொடி - 1/2 ஸ்பூன் கடுகு - 1 ஸ்பூன் உப்பு - தேவையான அளவு |
|
செய்முறை
பாகற்காயை 1/2 அங்குல அளவுக்கு நறுக்கவும். மிளகாய் வற்றல், உப்பு இவற்றை புளித்தண்ணீர் விட்டு மிக்ஸியில் அரைக்கவும். அரைத்த விழுதுடன் மஞ்சள் பொடி சேர்த்து பாகற்காய் துண்டுகளுடன் கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு தாளிக்கவும். பாகற்காய் துண்டுகளை தண்ணீர் இல்லாமல் பிழிந்து போடவும். நிதானமாக எரியும் அடுப்பில் சுமார் 20 நிமிடங்கள் வதக்கவும். மொறு மொறுப்பானதும் கீழே இறக்கவும்.
குறிப்புகள்:
நீர் விட்டுக் கொள்ளும் பாகற்காய் மொறு மொறுப்பாக வராது. எனவே இந்த வகை பொறியலுக்கு அவற்றை தவிர்க்கவும். காரப் பொடி போடுவதானால் மிளகாய் வற்றல் தேவையில்லை.
இந்திரா காசிநாதன் |
|
|
More