ரசப்பொடி வறுத்து அரைத்த சாம்பார் பொடி வறுத்து அரைத்த ரசப் பொடி கறிமாப் பொடி கூட்டுப் பொடி
|
|
|
|
|
சாம்பார் பொடி
தேவையான பொருட்கள் மிளகாய்த் தூள் - 1 1/2 கிண்ணம் கொத்துமல்லி விதைத் தூள் - 1 கிண்ணம் துவரம் பருப்பு - 1/2 கிண்ணம் கடலைப் பருப்பு - 1/2 கிண்ணம் வெந்தயம் - 3 தேக்கரண்டி மிளகுத் தூள் - 1/2 கிண்ணம் மஞ்சள் தூள் - 1 மேசைக் கரண்டி உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
செய்முறை கடலைப்பருப்பு, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் ஆகியவற்றைத் தனித்தனியே எண்ணெயில்லாமல் வறுத்துக் கொண்டு, மிக்சியில் நைசாக அரைத்துச் சலித்துக் கொள்ளவும். ஒரு பெரிய பாத்திரத்தில் மிளகாய்ப் பொடி, கொத்துமல்லி விதைப் பொடி, மிளகுப் பொடி, மஞ்சள் தூள் இவற்றுடன் சலித்து வைத்துள்ள பொடியையும் கொட்டி, நன்றாக மேலும் கீழுமாய்க் கலந்து உபயோகிக்கவும். இது மிகவும் மணமாக, எளிதில் செய்யக் கூடியதாக இருக்கும். |
|
தங்கம் ராமசாமி, ப்ரிட்ஜ் வாட்டர், நியூஜெர்ஸி |
|
|
More
ரசப்பொடி வறுத்து அரைத்த சாம்பார் பொடி வறுத்து அரைத்த ரசப் பொடி கறிமாப் பொடி கூட்டுப் பொடி
|
|
|
|
|
|
|