உப்பு ரவா ரொட்டி இதெல்லாம் நல்லதுங்க....
|
|
|
|
|
இனிப்பு ரவா ரொட்டி
தேவையான பொருட்கள் ரவை - 1 கிண்ணம் வெல்லம் - 3/4 கிண்ணம் தேங்காய்த் துருவல் - 1/2 கிண்ணம் வெண்ணெய் - 2 தேக்கரண்டி சீஸ் துருவல் - 1/4 கிண்ணம் ஏலக்காய் - 6 எண்ணெய், நெய் (கலந்தது) - 1/2 கிண்ணம்
செய்முறை ரவையை வெறும் வாணலியில் லேசாக வறுத்துக் கொள்ளவும். இரண்டு கிண்ணம் தண்ணீர் விட்டு, வெல்லமும் தேங்காயும் போட்டு அடுப்பில் கரைய விடவும். வெல்லம் கரைந்து கொதி வரும்போது ரவையைப் போட்டுக் கிளறவும். வெண்ணெயை அதில் போட்டு, ஏலக்காய் தூவி இறக்கி வைத்து நன்றாகக் கலந்து கொள்ளவும்.
ஓர் இலை அல்லது அலுமினியம் பேப்பரில் எண்ணெய் தடவி அதில் பெரிய எலுமிச்சம்பழ அளவு மாவை வைத்துச் சப்பாத்தி போல மெல்லியதாய்த் தட்டி தோசைக் கல்லில் போட்டு அடுப்பை மெதுவாக எரியவிட்டு இருபுறமும் நெய்/எண்ணெய் விட்டு, சிவந்ததும் எடுக்கவும். மேலாகச் சீஸ் துருவலைப் பரப்ப ரோல் போலச் சுருட்டிக் குழந்தைகளுக்குக் கொடுக்கவும். இது மிகவும் சுவையான ரொட்டி. கெச்சப் தொட்டுக்கொண்டு சுடச்சுடச் சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். |
|
தங்கம் ராமசாமி, ப்ரிட்ஜ் வாட்டர், நியூஜெர்சி |
|
|
More
உப்பு ரவா ரொட்டி இதெல்லாம் நல்லதுங்க....
|
|
|
|
|
|
|