|
ஜூலை 2007: குறுக்கெழுத்துப்புதிர் |
|
- வாஞ்சிநாதன்|ஜூலை 2007| |
|
|
|
குறுக்காக
3. நின்று கொல்லத் தெரியாதது (3) 5. முகத்தினை கோணலாக்கிக் காட்டலாம், மிரட்டித் திருடுவதற்கு (3, 2) 6. எதிரி பசுவை ரிஷிகளிடம் காணலாம் (2) 7. சிக்கனத்தைக் கடைப்பிடிக்காதவர் ஒரு வண்ண ஸ்வரம் சேர்த்தார் (3) 8. மயக்கத்தில் இடை விட்டுக் கலக்க, நாரும் ஊரும் ஒன்று (5) 11. சிற்பி செய்த செங்கல் தொடங்கியும் தொடங்காமல் ஆக்கியது குழப்படிதான் (5) 12. சேனைத் தலைவனே! யானை திரட்டு (3) 14. கடவுளே ஆதியும் அந்தமுமாகிய தேசப்பிதாவா... (2) 16. ...கைகூப்பி பக்தனுக்கும் பிட்டுக்கும் அடக்கி வைப்பது (5) 17. மலையுச்சி தேய உடலுச்சி (3)
நெடுக்காக
1. இமயம் போன்றது மனது உள்ளே மோகத்தால் தலைகால் புரியாமல் போனது (6) 2. மொத்தத்தில் சேராத குற்றமற்ற வழுதி தோலையெடு வெளியே (3) 3. எல்லோரும் குறையுள்ள அவனை அடைந்திட வரும் (5) 4. உணவில் ரசிப்பதற்குத் தேவையானது (2) 9. பிரகாசமடையச் செய்யும் வயலில் வேண்டாதது கயிற்றின் வேலை செய்யும் (2, 4) 10. இலக்கியத்தை ஒழித்த பாதகிக்கும் அனல் அடிக்கும் (5) 13. வட ஆப்பிரிக்க நாட்டுக்கு வட மொழி எழுத்தா? (3) 15. முழுதாக மூச்சு விடாமல் படி (2) |
|
புதிர் அரசிகள்
ஜூன் மாதப் புதிருக்கு எட்டு பேர் சரியான விடையை அனுப்பியிருந்தார்கள். ஆனாலும் முதல் மூவர் என்ற கொள்கையின்படி விஜயா அருணாசலம், அருணா ஸ்ரீனிவாசன், லக்ஷ்மி ஷங்கர் என்ற மூவரும் புதிர் அரசிகளாக அறிவிக்கப்படுகிறார்கள்.
அப்புதிரில் சில பூதங்கள் கொஞ்சம் எட்டிப் பார்த்திருந்தன. குமிழி என்ற விடையைக் கண்டு பிடித்தும், எப்படி என்று ஒரு கேள்வி மின்னஞ்சலில் வந்தது. பஞ்ச பூதங்களில் ஒன்றான நீரில் மற்றொரு பூதமான காற்று நுழையும் போது குமிழியாக வரும் என்பதன் அடிப்படையில் அது அமைக்கப்பட்டிருந்தது.
அடுத்த பூதமான நிலத்தைத் தோண்டக் கிடைக்கும் பொக்கிஷமான 'புதையல்' என்பதற்கான குறிப்பில் 'மறிக்கப்பட்ட' என்று தவறாக (மறைக்கப்பட்ட என்று இருந்திருக்க வேண்டும்) வெளியிட்டிருந்தும் எல்லோரும் சுதாரித்துக் கொண்டு சரியான விடையைக் கூறியிருந்தீர்கள்.
குமார் ராமசுப்ரமணியன் என்ற முந்நாள் புதிர் மன்னர் 'மூப்பு' என்ற விடையை (கண்ணில்) திரை விழும் பருவம் என்று குறிப்பிட்டார். இந்த விளக்கம் எனக்குப் புதிதே. 'திரை' என்றால் சுருக்கம் (wrinkles) என்று ஒரு பொருள். "நரையும் திரையுமாய்" என்ற பிரயோகம் வெறும் எதுகைக்கு வந்ததல்ல. கடலில் தோன்றும் 'அலை' என்ற 'சுருக்கம்' திரை என்று பழந்தமிழில் கூறப்படுவதை "திரை கடலோடியும் திரவியம் தேடு" என்ற பழமொழியில் தெரிந்து கொள்ளலாம். 'அலை'க்குத் 'திரை' என்ற சொல்லே மலையாளத்திலும் கன்னடத்திலும் புழங்குகிறது என்பதை அம்மொழி பேசும் நண்பர்கள் மூலம் அறிந்து வியப்படைந்தேன். இத்துடன் இம்மாதக் கதையில் திரை விழுகிறது.
வாஞ்சிநாதன் vanchinathan@gmail.com
புதிருக்குப் புதியவரா?
செய்முறையை அறிய இங்கே சொடுக்கவம்.
நீங்கள் புதிர் மன்னரா?
குறுக்கெழுத்துப் புதிருக்கான சரியான விடைகளை ஜூலை 25-க்குள் அனுப்பும் முதல் மூன்று வாசகர்களின் பெயர்கள் 'புதிர் மன்னர்கள்' சாதனைப் பட்டியலில் இடம் பெற்று அடுத்த இதழில் வெளிவரும். விடைகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: thendral@tamilonline.com. ஜூலை 25க்குப் பிறகு, விடைகளை www.tamilonline.com என்ற சுட்டியில் காணலாம்.
ஜூன் 2007 புதிர்அரசிகள்
1. விஜயா அருணாசலம், ப்ரிமாண்ட், கலி. 2. லக்ஷ்மி ஷங்கர், சன்னிவேல், கலி. 3. அருணா ஸ்ரீனிவாசன், அட்லாண்டா
புதிர்அரசிகள் மூவர் சார்பில் அவர்கள் வாழும் பகுதியில் உள்ள தமிழ்மன்றத்துக்குத் தென்றல் தலா 10 டாலர் நன்கொடை வழங்கும். அவர்கள் வாழும் பகுதியில் தமிழ்மன்றம் இல்லாத பட்சத்தில், அவர்கள் விரும்பும் தொண்டு நிறுவனத்துக்குத் தென்றல் நன்கொடை வழங்கும்.
ஜூன் 2007 குறுக்கெழுத்துப் புதிர் விடைகள் குறுக்காக: 5. சிதை 6. கலப்படம் 7. அல்லவா 8. மதுரை 9. சிம்பு 11. குமிழி 13. திப்பிலி 16. ஆசிரியப்பா 17. தடி நெடுக்காக: 1. புதையல் 2. நகரவாசி 3. மூப்பு 4. கடந்து 10. புதிய பாதை 12. மிஞ்சிய 14. பித்தன் 15. சாயல் |
|
|
|
|
|
|
|