|
மே 2005: குறுக்கெழுத்துப் புதிர் |
|
- வாஞ்சிநாதன்|மே 2005| |
|
|
|
குறுக்காக
5. வானவெளி ஒற்றைக் கிளவியாய் வலிக்கும் விதம் (2) 6. கோயிலில் துயிலிடம் புரட்ட அள்ளி ஆரம்பிக்கவில்லை (6) 7. &17. கல்லா அறிஞன் (4,2) 8.மற்ற ஏரிகளின் தொடக்கத்தில் யமுனையின் கரைகள் புரண்டன(3) 9.மாட்டைக் கட்டும் தூசுடன் சேர்ந்தது (3) 11.காலந்தாழ்த்து, அறிவைக் கேட்டதற்கா? (3) 13.ஒற்றை வண்டிச் சக்கரக் கலைஞன் (4) 16.மாலையில் பூ முகத்தை எதிர்ப்புறம் திருப்பும் (3,3) 17.[7இல் பார்க்கவும்] (2)
நெடுக்காக
1.இலங்கை நகரில் அரையணா போட்டால் மூக்கின்மேல் நிற்கும் (4) 2.கையில்லாச் செருப்புள்ளே வாய் குளறா கெடுதல் ஏற்படுத்தாது (5) 3.பிழை பிழைத்துக் கொள் (3) 4.பெண்ணை எடுப்பது கடைசிக் கொள்ளி சிதைந்த செயல் (4) 10.நுழைத்த கத்தியால் தாக்கி முடிவிலாத புயல் சூழ்ந்தது (5) 12.நூலென மெல்லியதின் மழைக்குள் இடைக்குயில் ஸ்வரம் (4) 14.காத்திருப்போர் கண் வைக்குமிடம் (2,2) 15.மாசாத்துவான் ஊர் நுழையார் (3) |
|
வாஞ்சிநாதன் vanchinathan@gmail.com
ஏப்ரல் 2005 : குறுக்கெழுத்துப் புதிர் விடைகள் குறுக்காக: 3. படகு, 5. பகலவன், 6. திரை, 7. முகாரி, 8. சாகத்துணி, 11. தென்புறம், 12. கொக்கு, 14. சபா, 16. தடுமாறிய, 17. வித்து நெடுக்காக: 1. கோபக்காரன், 2. அலறி, 3. பன்முகம், 4. குதி, 9. துருக்கியர், 10. மறந்தது, 13. சமாதி, 15. பாவி |
|
|
|
|
|
|
|