|
ஏப்ரல் 2005: குறுக்கெழுத்துப் புதிர் |
|
- வாஞ்சிநாதன்|ஏப்ரல் 2005| |
|
|
|
குறுக்காக
3. மேலே உரச குளிக்கும் தலையோடு நீரில் செல்லும் (3) 5. சுரமில்லா கவரி பெற்ற பலன் ஒரு சக்கர வாகனத்தில் பயணம் செய்பவன் (5) 6. வெள்ளை முடியோடு சேர்வது மூடி மறைப்பதற்குப் பயன்படும் (2) 7. முல்லையின் முனையோடு வள்ளல் அழுவதற்கு ராகம் (3) 8. இறப்பதற்கு அஞ்சாதே! பசுவின் கழிவு சூழக் கூக்குரலிடு (5) 11. அரைத் தென்றல் வெளிப்பக்கம் அண்டார்டிகா திசை (5) 12. ஒருகால் தரையில் இருக்க பொறுமையாக நல்ல உணவுக்குக் காத்திருக்கும் (3) 14. சங்கீதப் பாடல்கள் இரண்டும் தொடங்க கச்சேரியை நடத்தும் சங்கம் (2) 16. தள்ளாடிய அணைபோடு, மாய வெற்றி இறுதி (5) 17. கவித்துவம் கொண்ட தாவரத்திற்கு ஆதாரம் (3)
நெடுக்காக
1. புத்தி குறைவெனப் பழமொழி மதிப்பிடும் குணத்தினன் (6) 2. கத்தி மலர் இடையைச் சூழத் தெரிந்து கொள் (3) 3. இராவணன், முருகன், பிரம்மன் இவர்களின் ஒற்றுமை பல வேறுபட்ட தன்மை (5) 4. குறத்தியின் ஆதியும் அந்தமும் அறிய எம்பு (2) 9. சுழியின்றி உருக்கி, துயர் சூழ ஒரு மேற்காசிய தேசத்தினர் (6) 10. விட்டொழி, மந்த மயக்கத்தால் நினைவிலிருந்து அகன்றது (5) 13. சூழ்ச்சியில் புதையுண்ட மானிடத் தலைவர்க்கு நினைவுச் சின்னம் (3) 15. தீயவனை யாழ்ப்பாணத்தில் பயன்படுத்து (2) |
|
வாஞ்சிநாதன் vanchinathan@gmail.com
மார்ச் 2005: குறுக்கெழுத்துப் புதிர் விடைகள்
குறுக்காக: 3. அகங்காரி, 6. சரிந்து, 7. வறண்டு, 8. மகரந்தம், 13. கடுங்காவல், 14. இழந்து, 15. சரமாரி, 16. பசும்புல். நெடுக்காக: 1. பிசகாமல், 2. மந்திரம், 4. கர்வம், 5. காலாண்டு, 9. தண்டு, 10. சுகாதாரம், 11. சொல்லரிய, 12. கழஞ்சு, 13. கதுப்பு |
|
|
|
|
|
|
|