|
அக்டோபர் 2003 : குறுக்கெழுத்துப்புதிர் |
|
- வாஞ்சிநாதன்|அக்டோபர் 2003| |
|
|
|
குறுக்காக
1. ஒரு பூ மாலை, சிவந்தது (5) 7. ஆங்கில நடையுடன் திருவாதிரைப் பண்டத்திற்குச் சண்டை தேர்ந்தெடுப்பவர்கள் (7) 8. பொய்யர் விடுவது கழுத்தில் ஆடும் (3) 9. குளறுபடி மிகும் ஆட்டம் (3) 11. அப்பருக்கும் முன் பிறந்தவர் யாகவர் திதி லக்கினத் தொடக்கத்துடன் குழப்பம் (7) 13. ஒளி குன்ற, பாளம் சிதற, கடைசிச் சீட்டு கச்சேரியில் விடை பெறு (5,2) 14. ரவி அந்தப் பக்கம் காணாமல் போனான் (3) 16. கொடுத்த யானையின் கொம்பினாலான . . . (3) 17. வாழ்க்கைத் துணைவி வீக்கத்துடன் வினைமயம் முடியாமல் திரும்பினாள் (4, 3) 19. புல் தருபவர் பருவை நீக்கிய பிள்ளைகள் (5)
நெடுக்காக
1. எண்ணெய்க்காரன் உபகரணத்தில் வால் நுழைத்தால் ஊரில் மரியாதை (5) 2. அழைப்பு வந்த முதல் கரு கலைந்தது (3) 3. பத்துப் பாட்டு பெற்ற வெங்கடேசன் இருக்குமிடம் அரைக் கம்பம் (7) 4. துப்பாக்கியால் தாக்க வீரர் இறுதியில் தீபத்தில் மின்னினார் (3) 5. நட்பு நிறைவேறாத கல்யாணக் கூடமே, வானத்து வைரமே! (7) 6. நட்டு, ஓர் ஆட்டம் கண்ட வாகனத்தில் தொழிலாளி (5) 10. மிதுனம் முக்கால்வாசி கருத்த மாற்றத்தில் வெறிச்செயல் (7) 12. விஞ்ஞானிகளின் செயல் பார்த்து ஈடுபாடு (7) 13. உரலைவிட இரு மடங்கு துன்பம் வர இசைக்கலாம் (5) 15. தலை குப்புற இடையொடிந்து விழுந்தனர் கோஷ்டியினர் (5) 17. இதையணிந்த பெண்களைக் கண்டால் பாரதியார் பயப்படமாட்டார் (3) 18. காதோடு கடிதம் (3) |
|
வாஞ்சிநாதன் vanchinathan@vsnl.net
குறுக்காக:1. செவ்வந்தி 7. வாக்களிப்போர் 8. சரடு 9. கும்மி 11. திலகவதியார் 13. மங்களம் பாடு 14. மேற்கு 16. தந்த 17. கட்டிய மனைவி 19. புதல்வர் நெடுக்காக1. செல்வாக்கு 2. வருக 3. திருப்பதிகம் 4. சுடர் 5. நட்சத்திரமே 6. ஓட்டுநர் 10. மிருகத்தனம் 12. கண்டுபிடிப்பு 13. மத்தளம் 15. குழுவினர் 17. கச்சு 18. மடல் |
|
|
|
|
|
|
|