|
ஜூன் 2002: குறுக்கெழுத்துப்புதிர் |
|
- வாஞ்சிநாதன்|ஜூன் 2002| |
|
|
|
குறுக்கெழுத்தில் இரண்டு வகை. ஒன்று நேரடியாக விடையை விளக்குவது, ஆங்கிலத்தில் இதற்கு Quick Clues என்று கூறுவார்கள். மற்றது, ஆளைக் குழப்பி திசை திருப்பி வெவ்வேறு கோணங்களில் தேட வைக்கும் வகை, ஆங்கிலத்தில் Cryptic Clues என்று கூறுகிறார்கள்.
ஆங்கிலத்தில் சுமார் எண்பது வருடங்களாக நன்கு வளர்ச்சியடைந்த பாணி இங்கு கையாளப்பட்டுள்ளது. ஒரு வார்த்தையை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து அக்குக்கு ஒரு அர்த்தம் ஆணிக்கு ஒரு அர்த்தம் ஆனால் மொத்தத்திற்கும் வேறு அர்த்தம் என்ற முறையில் அமைப்பது இதன் சிறப்பு.(அது சரி, `அக்கு' என்றால் என்ன? என்று யாருக்காவது தெரிந்தால் எனக்குச் சொல்லுங்களேன்!)
குறுக்காக:
3. நல்வழி காட்டும் உரைக்குத் துணை நாடு (5) 6. செல்வமாக மலர்ந்து அருளியது ஒரு பேச்சுக்குத்தான் (4) 7. மாரியை நம்பிய அவனிடம் பாதி தருவானா? (4) 8. அநேகமாக எல்லா மகத்தான செய்யுளுடன் லாபகரமான எல்லைகள் சேரும் (6) 13. செல்வமில்லா படைவீடு ஆரம் பூண்டுள்ள உறுதி (6) 14 .காரியம் சாதிக்காதவர்களுக்கும் விற்பனையை முடித்த பூக்காரிக்கும் இருப்பது (4) 15. புல்லாங்குழல் தொடங்கி மேளம் மாற்ற ஒருவருக்குப் பிறந்தவள் (4) 16. சுவைபானத் தழையில் வைக்கோல் முனைகள் இன்றியமையும் (5)
நெடுக்காக: 1. அறிவுள்ளவள் தேர்வில் பெறுவது (5) 2. ஒரு மலர் மாடா பூரம் மாற்றியது? (5) 4. நிறைய கௌரவம் சம்பந்தப்பட்ட உறுதியான சொல் (4) 5. ஆரோக்கியமுள்ள நண்பர்களிடமிருந்தும் தொற்றிக்கொள்ளூம் தோஷம்? (4) 9. பழங்காலப் பாட்டுப் போட்டி (3) 10. நூற்றுக் கணக்கில் சொல்லப்படும் (5) 11. அழகிய உலகம் தோழி பின் வரப் பார்த்தாலே துளைக்கும் (3, 2) 12 சுவாரசியமில்லாதது, சுவாரசியம் தொடங்க விருந்துணவில் இருக்கும் (4) 13. எனவே மாடு கரங்கொண்டு.... (4)
வாஞ்சிநாதன் vanchinathan@vsnl.net |
|
குறுக்கெழுத்துப்புதிர் விடைகள்
குறுக்காக: 3. உபதேசம் 6. திருவாய் 7. மானாவாரி 8. பெரும்பலான 13. ஆணித்தரம் 14. வெறுங்கை 15. புதல்வி 16. தேவையில்லை
நெடுக்காக:1. மதிப்பெண் 2. ஆவாரம்பூ 4. பலமான 5. சகவாச 9. லாவணி 10. சதவீதம் 11. அம்பு விழி 12. அறுசுவை 13. ஆகையால் |
|
|
|
|
|
|
|