| 
											
											
											
												
                                                    
                                                    
                                                        
	                                                        | மே 2002 : குறுக்கெழுத்துப்புதிர் | 
	                                                            | 
                                                         
                                                        
	                                                        - வாஞ்சிநாதன் | மே 2002 |![]()  | 
	                                                         | 
                                                         
                                                        
	                                                        | 
                                                                 
                                                                
                                                                
	                                                         | 
                                                         
                                                     
                                                    
												 | 
                                            
                                            
											
											
												குறுக்கெழுத்தில் இரண்டு வகை. ஒன்று நேரடியாக விடையை விளக்குவது, ஆங்கிலத்தில் இதற்கு Quick Clues என்று கூறுவார்கள். மற்றது, ஆளைக் குழப்பி திசை திருப்பி வெவ்வேறு கோணங்களில் தேட வைக்கும் வகை, ஆங்கிலத்தில் Cryptic Clues என்று கூறுகிறார்கள்.
  ஆங்கிலத்தில் சுமார் எண்பது வருடங்களாக நன்கு வளர்ச்சியடைந்த பாணி இங்கு கையாளப்பட்டுள்ளது. ஒரு வார்த்தையை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து அக்குக்கு ஒரு அர்த்தம் ஆணிக்கு ஒரு அர்த்தம் ஆனால் மொத்தத்திற்கும் வேறு அர்த்தம் என்ற முறையில் அமைப்பது இதன் சிறப்பு.(அது சரி, `அக்கு' என்றால் என்ன? என்று யாருக்காவது தெரிந்தால் எனக்குச் சொல்லுங்களேன்!)
  குறுக்காக:
  3. ஒரு வள்ளல் பதம் பிடிக்க வடமொழிக்காவியம் (5) 6. உள்ளே கடை கட்ட ஊதுவது மதவழக்கம் (4) 7. மாலையில் சல்லாபம் தொடங்க இன்பக்கிளர்ச்சியூட்டும் செய்கை (4) 8. பட்டம் பெற்றவன் பணக்காரன் வரம்புகளுக்குள் வடித்த குழப்பம் (6) 13. நூல் செய்து கணவன்மேல் அதீத அன்பு (6) 14. பாதி பிரிந்துள்ள இறுதித் துயரத்தில் திமிர் தோன்றும் செய்கை (4) 15. எட்டா உயரத்து ஆயுதம் கண்ணைக் கவர்ந்துவிடும் (4) 16. ஓரங்கள் விரும்பி யாரிடை ஊருக்குப் போகும்போது பெறுவது ? (5)
  நெடுக்காக:
  1. வாயில் பல் பொருத்தி வாடி சக்களத்திகளின் தலைவியே ! (5) 2. சிவக்கும்படியான தாக்குதல் தந்தாலும் சாயாத நிலை ? (5) 4. மூன்று, நான்கு கால்களுடன் படைப்பது இவன் தொழில் (4) 5. மிருதுவான தடுப்பு விழிப்புணர்வைத் தூண்டாது (4) 9. தவறு திருத்தத் தொடங்கியவன் பாண்டியன் (3) 10. அருந்ததி பிறர் தலைகளால் கற்புடன் நன்மதிப்பு பெறுவாள் (5) 11. வலது இரவில் கூடி... நீங்கள் நினைப்பது கிடையாது! (5) 12. பிரவாகத்தில் வந்த ஸ்வரம்? பிஞ்சாக உண்பர் (4) 13. பலமுறை பாடப்படும் காஞ்சி இளவரசி (4) | 
											
											
												| 
 | 
											
											
											
												வாஞ்சிநாதன் vanchi@chennaionline.com
  குறுக்கெழுத்துப்புதிர் விடைகள்
  குறுக்காக: 3. காதம்பரி  6. சடங்கு 7. சரசம்  8. படித்தவன்  13. பதிபக்தி  14. துள்ளல்  15. வானவில்  16. பிரியாவிடை  நெடுக்காக: 1. வாசல்படி 2. செங்குத்து  4. தச்சன் 5. பஞ்சணை  9. வழுதி 10. அபிமானம்  11. அதுவல்ல  12. வெள்ளரி 13. பல்லவி | 
											
											
												 | 
											
											
											
												 | 
											
											
											
												 | 
											
                                            
												| 
												
												
												 | 
											
                                            
											
											
                                            
												 | 
											
											
												| 
													
													
																											
												 | 
											
											
												| 
													
												 |