தபால்தலை கௌரவம் பாரத ரத்னா சிறுத்து வரும் மனங்கள்
|
|
தண்டவாளத்தின்மேல் அரண்மனை |
|
- அரவிந்த்|மார்ச் 2008| |
|
|
|
|
பெரிய ஹோட்டல்களிலும், நட்சத்திர விடுதிகளிலும் ஆண்டுக் கூட்டங்கள் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வந்த நிறுவனளுக்குக் குறைந்த செலவில் இன்னொரு சுவையான மாற்று கிடைத்திருக்கிறது. வந்துவிட்டது 'ஹெரிடேஜ் ஆன் வீல்ஸ்' என்னும் ரயில் வாகனம். ரயில் பெட்டிகளை சொகுசு பங்களா, அரண்மனை போல மாற்றி அமைத்து, அதில் உணவுவிடுதி, பார் உட்பட எல்லா வசதிகளையும் செய்துள்ளார் கள். சிங்கப்பூர், மலேசியா, பாங்காக் எனப் பறந்து அலுத்து விட்ட சுற்றுலாப் பயணிகளுக்கு இந்தப் புதிய ரயில் ஒரு வரப் பிரசாதம். இந்திய ரயில்வேயும் ராஜஸ் தானின் சுற்றுலா வளர்ச்சிக் கழகமும் இணைந்து அறிமுகப்படுத்தியிருக்கும் இந்த ரயில், ஜெய்ப்பூர்-ஷெகாவதி-பிகானீர் வழித்தடத்தில் பயணம் செய்கிறது. போகும் வழியெல்லாம் பிரம்மாண்ட அரண்மனைகள், மான்கள் சரணாலயம், மாண்ட்வா கோட்டை, கஜ்னோர் கோட்டை போன்ற வற்றைப் பார்க்கலாம். வரவேற்கத்தக்க முயற்சிதான்.
அரவிந்த் |
|
- |
|
|
More
தபால்தலை கௌரவம் பாரத ரத்னா சிறுத்து வரும் மனங்கள்
|
|
|
|
|
|
|