தீபாவளி 'வெடி' ஜோக்குகள்
|
|
|
வாசலில் போகும் வாழையிலை வியாபாரியிடம்,
ஏம்பா காலையில இப்படி 'வாழல வாழல' ன்னு சொல்லி வித்திண்டு போற. வெறும் 'இலை'ன்னு சொல்லேன். கேக்கறதுக்கு நல்லாயிருக்கும்.
******
நீங்க ஏங்க இந்த வயசான காலத்தில பம்புல தண்ணி அடிக்கிறீங்க. உங்க பசங்க எங்க, அவங்கள அடிக்கச் சொல்லவேண்டியது தானே?
அங்கிட்டு பாரு தண்ணி அடிச்ச கணக்கா தூங்கினு இருக்காங்க.
******
ஹாஸ்பிடலில்: என்னங்க இது, எங்க அப்பா வோட இறப்பு சான்றிதழ் கொடுக்கறதுக்கு 3 நாளா இப்படி அலக்கழிக்கிறீங்களே?
எங்க ஹாஸ்பிடல்ல எல்லாத்தையும் ரெண்டு மூணுன்னுதான் செய்து பழக்கம். இன்னிக்கு சாய்ந்தரம் வரைக்கும் வெயிட் பண்ணுங்க, வேற ரெண்டுக்கு வெயிட் பண்றோம், அதோட சேர்த்து உங்களுடையதையும் செய்து கொடுத்திடறோம்.
******
என்னடா, ரொம்ப நொந்து போயிருக்க போலிருக்கு
ஆமாண்டா, தாத்தா பாட்டியோட தமிழ்ல பேசட்டும்னு ஒருமாசமா என் 4 வயசு பையனுக்கு தமிழ் சொல்லிக்கொடுத்தோம். எங்க அப்பா, அம்மா என்னடான்னா, வந்ததில் இருந்து குழந்தையோட இங்கிலீஷ்லியே பேசி ஒரேடியா சந்தோஷப்பட்டுகிட்டு இருக்காங்க. என் பொண்டாட்டி முறைக்கிறா?!
****** |
|
மாமா: அம்மா நம்ம காவேரியை கொஞ்சம் இங்க வந்திட்டு போகச்சொல்லேன்.
என்னங்க இது, எல்லாரும், காவேரி வர்றதுக்காக போராடறாங்க, நீங்க இப்படி வந்திட்டு போகச்சொல்றீங்க! கொஞ்சம் மெள்ளமா பேசுங்க. இல்லன்னா நம்ம பொண்ணு காவேரின்னு அழுத்தம் திருத்தமா சொல்லுங்க.
******
என்ன உங்க அப்பா தவறினத்திற்குச் செய்த காரியங்கள் எல்லாம் ரொம்ப சிறப்பா செய்தீர் களாமே
ஆமா, அவர் உயிரோட இருந்து பார்த்திருந்தா நிறையவே சந்தோஷப்பட்டிருப்பார்.
******
பக்கத்து வீட்டுப் பெரியவர்: ஏண்டா தம்பி, ஒரு போன் பண்ணிக்கிறேன். சரியா.
சரீங்க மாமா.
சரி, இந்த போன் பக்கத்துல ஒரு சேர் போடக்கூடாதா?
இல்ல மாமா, சேர் போட்டா, ஓசியா கால் பண்ணவர்றவங்க எல்லாம், ரொம்ப நேரம் உக்கார்ந்து பேசிக்கிட்டேயிருப்பாங்கன்னு சொல்லி நாங்க எடுத்துவிட்டோம்.
ஸ்ரீ கோண்டு |
|
|
More
தீபாவளி 'வெடி' ஜோக்குகள்
|
|
|
|
|
|
|