|
ஏப்ரல் 2010: ஜோக்ஸ் |
|
- |ஏப்ரல் 2010| |
|
|
|
பாட்டி, எப்பப் பாத்தாலும் உருப்பட மாட்டேன்னு என்னைத் திட்டுவியே. இப்ப மந்திரி சம்பளம் வாங்கறேன், தெரியுமா?
எதுக்குடா அடுத்தவன் சம்பளத்தையெல்லாம் வாங்கறே?
வி. காமாட்சி, சான் ஹோஸே *****
பண்ணையார் வீட்டு வாசல்ல கிழவிங்க கூட்டமா இருக்கே, என்ன விஷயம்?
அதுவா, அவர் மகனுக்குக் கன்னத்தில குழி விழற பொண்ணு வேணும்னு தரகர் சொன்னாராம்....
வி. காமாட்சி, சான் ஹோஸே *****
டாக்டர், ஒரு பல்லுக்குப் பதிலா ரெண்டைப் பிடுங்கிட்டிங்களே!
அதுவா! போர்டைப் பாக்கலியா? 'பை ஒன் கெட் ஒன் ஃப்ரீ'ன்னு எழுதியிருக்கே!
வி. காமாட்சி, சான் ஹோஸே ***** |
|
அவர்: அது போலீஸ்காரார் வீட்டு நாய்தான்னு எப்படி இவ்ளோ உறுதியா சொல்றே? இவர்: பின்ன, அதுக்கு இவ்ளோ பெரிய தொப்பை இருக்குதே, அதுனாலதான் சொல்றேன்.
தெனாலி *****
நோயாளி: டாக்டர் வலி தாங்கல, உயிரே போயிடும்போல இருக்கு. டாக்டர்: பயப்படாதீங்க. நான் எதுக்கு இருக்கேன். ஆபரேஷன் பண்ணாம அப்படியெல்லாம் நடக்க விட்டுருவேனா என்ன?
தெனாலி *****
உறவினர்: பையன் என்ன செய்யறதா இருக்கான்? இவர்: மேல படிக்கப் போறான் உறவினர்: டாக்டருக்கா, எஞ்சினியருக்கா? இவர்: அட நீங்க வேறங்க. அவன் மாடி ரூம்ல போய் பேப்பர் படிக்கப் போறான்....
தெனாலி *****
அவன்: எங்க மாமா மாதிரி நானும் கலெக்டர் ஆகணும்னு ஆசைப்படறேன். இவன்: ஓ. உங்க மாமா கலெக்டராடா, எந்த ஊர் கலெக்டர்? அவன்: இல்லடா, எங்க மாமாவும் சின்ன வயசுல கலெக்டர் ஆகணும்னுதான் ஆசைப்பட்டாராம்.
தெனாலி ***** |
|
|
|
|
|
|
|