|
|
|
|
ஊருக்குப் போயிருப்பவள் ஆர்வத்துடன் சொல்கிறாள்! அப்பா, தாத்தா உங்களைப்பற்றி நிறைய கதைகள் சொல்லியிருக்கிறார் அங்கு வந்ததும் சொல்கிறேன் எல்லாமும்!
இனிதான் அறிந்து கொள்ளப் போகிறேன் என்னைப் பற்றி!
*****
நேசமிகு விசாரிப்பு! ஊரிலிருந்து வினவினாள் அப்பா, சீமா ஆன்ட்டி வீட்டு செல்லக்குட்டி நல்லாயிருக்கா? போய்ச் சொன்னதும் பெருமகிழ்ச்சியும் சிரிப்பும் அண்டை வீட்டு சீமாவுக்கு! பாவம் அந்த நாய், பார்த்துக் கொண்டு ஓரமாய் நிற்கிறது தனக்கான அன்பு விசாரிப்பு பறிபோனது தெரியாமல்....
***** |
|
ஏரிக்கரையில்!! பெருநடையின் வேகம் கூடிய தருணமது! எதிர்த்திசையில் வந்தவள் எவ்வித எதிர்பார்ப்புமின்றி சட்டென சிந்திச் சென்றது என்னுடனேயே இருந்துவிட அப்பசுஞ் சிரிப்பினைத்தான் பரப்பிக் கொண்டிருக்கிறேன் இதன் வாயிலாக உங்களுக்கும்!!
பழமைபேசி, காலியர்வில், டென்னஸி |
|
|
|
|
|
|
|