|
உத்திரமேரூர் ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோயில் |
|
- சீதா துரைராஜ்|செப்டம்பர் 2022| |
|
|
|
|
தமிழ்நாட்டில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், உத்திரமேரூரில், ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.
தலப்பெருமை இவ்வாலயத்தின் வடமேற்கு மூலையில் தனிச் சன்னதியில் முருகப்பெருமான் ஊன்றிய வேல்தனைச் சிலை வடிவில் தரிசிக்கலாம். தெய்வயானையும் வள்ளியும் ஒன்றாகி கஜவள்ளியாக ஒரே அம்மனாக இங்கே சன்னிதி கொண்டிருப்பது ஓர் அபூர்வக் காட்சி.
இங்கே சிவலிங்க மூர்த்தியாகக் கடம்பநாதர் எழுந்தருளியுள்ளார். கிழக்கு நோக்கிய ஐந்து நிலைகளையுடைய ராஜ கோபுரமும், வெளிப்பிரகாரத்தில் இடப்புறம் ஊஞ்சல் மண்டபமும், வலப்புறத்தில் வசந்த மண்டபமும் அமைந்திருக்க நடுவில் பலிபீடம், கொடிமரமும், அதைத் தாண்டி இந்திரன் தந்த ஐராவதத்தை முருகன் வாகனமாக்கிக் கொண்டதை உறுதிப்படுத்தும் விதமாக யானை வாகனமும் அமைந்துள்ளன.
உள்பிராகாரத்தில் பெருதண்டமுடையான், திரிபுரசுந்தரி, காசி விசுவநாதர் சன்னிதிகளுடன், சந்தான கணபதி சன்னதியும், வேல், வேலாயுத மூர்த்தியாகக் காட்சி தரும் சன்னிதியும் உள்ளன. பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேற இங்கே முருகனை வழிபடுகின்றனர்.
உள்மண்டப முகப்பில் முருகனின் திருக்கல்யாணக் காட்சி மனதைக் கவர்கின்றது. பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் முருகனுக்கு பாலபிஷேகம், காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
இரு அசுரர்களையும் அழித்த முருகப்பெருமான், தனது படை, பரிவாரங்களுடன் தரிசிக்கும் வண்ணமாக சிவலிங்க மூர்த்தியாகக் கடம்பநாதர் எழுந்தருளியுள்ளார். மூலையில் தனிச்சன்னிதியில் முருகன் வேல்தனைச் சிலை வடிவில் தரிசிக்கலாம்.
வேலை வணங்குவதே வேலை! |
|
சீதாதுரைராஜ், சான் ஹோஸே, கலிஃபோர்னியா |
|
|
|
|
|
|
|