அமெரிக்க அதிபர் தேர்தல் 2008 இசையுதிர் காலம் டிசம்பர் பூக்கள்
|
|
|
|
அமெரிக்க ஐக்கிய மாநிலங்களின் (USA) பல்வேறு நகரங்களில் தமிழ் நாடகங்கள் நடத்தி வரும் நாடகக் குழுக்கள் சில சேர்ந்து மே மாதம் நியூ ஜெர்ஸியில் முதல் தமிழ் நாடக விழாவை நடத்த உள்ளன. இவ்விழா நியூ ஜெர்ஸி, நியூயார்க், பென்சில்வேனியா¢ல் வாழும் தமிழர்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெறுவதோடு அமெரிக்காவின் பிற பகுதிகளில் வாழும் நாடக ஆர்வலர் களையும் ஈர்க்கும் என்பதில் ஐயமில்லை.
அமெரிக்கத் தமிழ் நாடக விழாவின் முக்கிய நிர்வாகிகள்:
- ரமணி, ஸ்டேஜ் ப்ரெண்ட்ஸ், (USA), நியூ ஜெர்ஸி
- தீபா ராமானுஜம், க்ரியா, சான் பிரான்ஸிஸ்கோ, விரிகுடாப் பகுதி
- சாரநாதன், ஹூஸ்டன் மீனாட்சி நாடகக் குழு
- மணி ராம், அவதார்ஸ், சான் பிரான்ஸிஸ்கோ, விரிகுடாப் பகுதி
- சுமித்ரா ராம்ஜி, இம்மெச்சூர் அமெச்சூர் ஆர்டிஸ்ட்ஸ்
- டாக்டர் ஸ்ரீதரன், சிவாஜி கணேசன் தியேட்டர்ஸ்
ஸ்டேஜ் ப்ரெண்ட்ஸ் (USA) 14 வருடங்களாக தரமான நாடகங்களை அளித்து வந்தபோதிலும், NY, NJ, PA, MA தவிர மற்ற மாநிலத் தமிழர்களை மகிழ்விக்க முடிய வில்லையே என்ற ஆதங்கம் ரமணியை உறுத்தி கொண்டே இருந்தது.
க்ரியா குழு, 2005லிருந்து மூன்று வருடங் களாக பிரான்ஸிஸ்கோ விரிகுடாவில் மட்டுமல்லாமல் இந்தியாவிலும் நாடகங்களை வெற்றிகரமாக மேடையேற்றி உள்ளது. அமெரிக்காவில் பல்வேறு மொழிகளுக்கான நாடக விழாக்கள் (சில இந்திய மொழி களிலும் கூட) நடைபெறும்போது, தமிழுக் கென்று ஒரு நாடக விழா இல்லை என்பது தீபாவின் ஆதங்கம்.
தொலைக்காட்சி புகழ் டி.வி. வரதராஜன், க்ரியா குழுவினருடன் சேர்ந்து நடித்த நாடகத்தைப் பார்க்க விரிகுடாப் பகுதிக்கு ரமணி விஜயம் செய்தார். க்ரியா மற்றும் நாட்டக் குழுவினரின் திறனை நேரில் கண்டு அசந்தே போனார்! நியூ ஜெர்ஸியினரும் இதைக் கண்டு களிக்க வேண்டும் என்று உறுதி பூண்டு, முதலாவதாக, மணி ராமின் (நாட்டக் குழுவின் நாடக ஆசிரியர்) 'ரகசிய சினேகிதியே' நாடகத்தை, ஸ்டேஜ் ப்ரெண்ட்ஸ் நடிகர்களை வைத்து மேடை யேற்றி வெற்றிகண்டார்.
அமெரிக்காவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள நாடகத் திறனைப் பிற பகுதிகளில் வசிப்பவர்கள் எளிதில் அறிந்து கொள்ள முடிவதில்லை என்பதைப் பற்றி தீபாவும் ரமணியும் சேர்ந்து சிந்திக்க இது வழி வகுத்தது. ஒவ்வொரு குழுவும் பல இடங் களுக்குச் சென்று நாடகம் நடத்துவது மிகக் கடினம். அதனால், ஏன் பல குழுக்கள் சேர்ந்து ஒரே இடத்தில் சில நாடகங்களைப் போடக் கூடாது என்று எண்ணத் தொடங்கினர். ஒரே கல்லில் இரண்டு மாங்காயாக, 'தமிழ் நாடக விழா' இல்லாத குறையையும் போக்கி விடலாமே என்று எண்ணினர். தீபா, ரமணியுடன் அதைப் பற்றி மேற்கொண்டு கலந்தாலோசிக்க நியூ ஜெர்ஸிக்குப் போகும் போது, ஹ¥ஸ்டன் நாடகக் குழுத்தலைவர் சாரநாதனும் சேர்ந்து கொண்டார். மணி ராம் தொலைபேசி வழியாக கலத்து கொண்டார். அவ்வாறு பிறந்ததுதான் 'அமெரிக்காவின் முதல் தமிழ் நாடக விழா'.
தொடர்ந்து நடத்த வேண்டும் என்ற குறிக்கோளுடன், சுமித்ரா மற்றும் ஸ்ரீதரனும் குழுவில் சேர்ந்தார்கள். சற்றே கூர்ந்து பார்த்ததில் அமெரிக்காவின் பல மூலை முடுக்குகளிலும், நிறைய நாடகக் குழுக்கள் இயங்கி வருவது தெரியவந்தது. |
|
மக்களின் வசதியை முன்னிட்டு, இரண்டே நாள் விழாவாக இதை நடத்தப் போகிறார்கள். இந்த முதல் விழாவில், ஸ்டேஜ் ப்ரெண்ட்ஸ் நாடகத்துடன், நியூஜெர்ஸிக்கு வெகு தூரத்திலிருந்து வரும் வேறு மூன்று குழுக்களைச் சேர்த்து, நான்கு நாடகங்கள் மேடையேற்றப்படும். (அவற்றைப் பற்றிய விவரங்களை இனிவரும் தென்றல் இதழ்களில் காணலாம்.) வரும் ஆண்டுகளில் இன்னும் அதிகக் குழுக்களுக்கு வாய்ப் பளிக்கும் நோக்கம் உள்ளது. அதனால், எல்லாத் தமிழ் நாடகக் குழுக்களும், விழா நிர்வாகிகளுடன் தொடர்பு கொண்டு, மே மாத விழாவுக்கு வருகை தந்து, விழாவை ஆதரிப்பது உற்சாகமூட்டும்.
அமெரிக்காவில் இயங்கி வரும் நாடகக் குழுக்களைப் பற்றிய கிடைத்த அளவுத் தகவல்கள் கீழே செய்தியாகத் தரப் பட்டுள்ளது. பிற குழுவினர் உடனே விழா நிர்வாகிகளுடன் தொடர்பு கொள்ளவும்.
இவ்விழாவுக்கான முயற்சிகளில் பலர் ஈடுபட்டிருப்பினும், இதற்கான இமாலய முயற்சியை ஸ்டேஜ் ப்ரெண்ட்ஸ் குழுவினரே மேற்கொண்டுள்ளனர் என்று கூறினால் மிகையல்ல. விழா அவர்களது பேட்டையான நியூஜெர்ஸியில் நடக்கவிருப்பதால் எல்லாத் தரப்பினரும் மகிழ்ச்சியாக அனுபவிக்க வேண்டும் என்பதே குறியாக, பம்பரமாகச் சுழன்று உழைத்து கொண்டிருக்கிறார்கள். நீங்களும் உங்களாலான ஆலோசனைகளைத் தெரிவிக்கலாம்.
இந்தியா மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற நாடக விழாக்களில், மற்ற மொழி நாடகங்களின் மேடை அமைப்புக்கள் தமிழ் நாடகங்களைவிட மேன்மையாக அமைந்திருந்ததைக் கவனித்துள்ள விழா நிர்வாகிகளும் பங்கேற்கும் குழுக்களும், இந்த முதல் விழா நாடகங்களில் மேடையமைப்பும் தயாரிப்பும் மிகச் சிறப்பாக அமையப் பாடுபட்டு வருகிறார்கள். அதற்கு மிகச் செலவாகிறது என்பதால், நன்கொடைகளும் நன்றியுடன் வரவேற்கப்படும்.
வருங்கால நாடக விழாக்களில் பங்கேற்கவும், குழுக்களுக்கு நன்கொடை அளிக்கவும், விழா நடத்தப் பணி புரியவும் தொடர்பு கொள்ள வேண்டிய விவரங்களுக்கு அணுக வேண்டிய இணையத் தளங்களும்,மின்னஞ்சல் முகவரிகளும் பின் வருமாறு: http://www.StageFriendsUSA.com ரமணி: StageFriends@Hotmail.com
தீபா ராமானுஜம்: dramanujam@yahoo.com
கதிரவன் எழில்மன்னன் |
|
|
More
அமெரிக்க அதிபர் தேர்தல் 2008 இசையுதிர் காலம் டிசம்பர் பூக்கள்
|
|
|
|
|
|
|