|
சில புள்ளி விபரங்கள் : பல உண்மைகள் |
|
- |மார்ச் 2002| |
|
|
|
இந்தியக் குடியரசுத் தலைவர் 53வது குடியரசு தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் பெண்கள் மீதான கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டுமென்பதை தெள்ளத் தெளிவாக உரத்த சிந்தனையாக முன்வைத்தார்.
''பெண்கள் இன்று பஞ்சாயத்துகளில் மட்டு மல்லாமல் பேருந்துகளிலும் தெருக்களிலும் ஒவ்வொரு குடும்பத்திலும் அவமதிக்கப்படு கிறார்கள். இதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.''
''பெண்களின் உரிமைகள் மனித உரிமை களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மனித வளத் தின் முக்கிய காரணிகளாகப் பெண்கள் விளங்கி வருகின்றனர். இருந்த போதிலும் சமூகத்தில் அவர்களின் நிலை மிகவும் வருத்தத்திற் குரியதாகவே உள்ளது.''
பெண்கள் இயக்கங்கள் பிரபலமாகி அவர்கள் திறம்பட செயலாற்றி வருகின்ற போதிலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் கொடு மைகளும் இன்னும் தொடர்வது கவலை அளிக் கிறது. பெண்களுக்கு எதிராக இழைக் கப்படும் கொடுமைகள் பற்றிய செய்தி தினமும் பத்திரி கைகளிலும், மின்னணு தகவல் சாதனங்கள் மூலமும் வந்தவண்ணம் உள்ளன. வரதட்சணை முறை நம் இளம் பெண்களின் வாழ்க்கையை அழித்து வருகிறது. பெண் சிசுக் கொலைக்கும் இது மூலகாரணமாக அமைகிறது.
இவ்வாறு இந்தியாவில் முதற்குடிமகன் பெண்கள் நிலை குறித்து தனது ஆதங்கத்தை வருத்தத்தை தெரிவிக்கின்றார். இதுவரை இந்திய வரலாறு கண்டுள்ள குடியரசுத் தலைவர்களுள் கே. ஆர். நாராயணன் மிகவும் வித்தியாசமானவராகவும் சமூகநிலைமைகள், நாட்டுநடப்புகள் பற்றிய மிகவும் உன்னிப்பான அவதானங்களை துணிவுடன் வெளிப்படுத்துபவ ராகவும் உள்ளார்.
பொதுவில் ஆண்/பெண் இடையே நிலவும் பராபட்சம் பெண்களின் முன்னேற்றத்தை மிகவும் பாதிக்க செய்கிறது. சமுதாய முன்னேற்றம் என்பது பெண்களின் முன்னேற்றத் தையும் கொண்டதாகவே இருக்கிறது. ஆனால் நடைமுறைப் புள்ளிவிவரங்கள் மிக மோசமான முறையில் பெண்கள் இம்சிக்கப்படுவதையும், பாரபட்சத்துக்கு உள்ளாக்கப்படுவதையும் சுட்டிக்காட்டுகிறது.
பெண்களுக்கு சமூக ரீதியான பாதுகாப்பும் அவர்களது சுயமரியாதையும் பாதுகாக்கக் கூடிய நடைமுறைகள் சமூக மட்டத்தில் இன்னும் வளர்ச்சியுறாமலேயே உள்ளன. ஓரளவு கல்வி வளர்ச்சி, பொருளாதாரப் பங்கு கொள்ளல், அதிகாரத்தில் தலைமையில் பங்கு கொள்ளல் போன்ற சில நிகழ்வுகள் பெண் களுக்கு கிடைக்கப் பெற்றாலும் பெரும்பாலான பெண்கள் இன்னும் அறியாமையில்தான் உழன்று வரும் நிலை தான் தொடர்கிறது.
99.9% பெண்கள் சமஉரிமையுடன் பாரபட்சம் அற்று வாழ்வதற்கான உத்தரவாதம் இல்லாம லேயே உள்ளனர்.
நாட்டில் உள்ள பல்வேறு பணிகளிலும் வேலைவாய்ப்புகளிலும் ஆண்களும் பெண்களும் சமமான அளவில் ஈடுபடவில்லை. ஊதியத்திலும் இருபாலாருக்கும் இடையே ஏற்றத் தாழ்வு காணப்படுகிறது.
பெரும்பாலான பெண்கள் அதாவது 95% (ஆண்களில் 89%) அமைப்புசாராத தொழில் களில் வேலை செய்கிறார்கள். பெரும்பாலான பெண் தொழிலாளர்கள் அதாவது 90% (ஆண் களில் 5 %) கிராமப்புறங்களில் உள்ளனர். நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 28.58 சதவிகிதம் பெண்கள்தான் வேலைக்குச் செல்கின்றனர். இது ஆண்களில் 75 % (1991 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி)
கிராமப்புறங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் 32.8 % என்றும், நகர்புறங்களில் 15.5 % என்றும், 1993-94 ல் மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆண்களில் வேலைக்குச் செல்வோர் கிராமப்புறங்களில் 55.3 % ஆகவும் நகர்ப்புறங் களில் 52.1 % ஆகவும் இருந்தனர்.
ஆண்களைவிட பெண்கள் அதிகமாக வேலை பார்க்கும் தொழில்களில் குறிப்பிடத்தக்கவை வீட்டு வேலைகள், பீடி உற்பத்தி, நூல் நூற்ப்பு, நெசவு, கயிற்று விரிப்புகள் தயாரிப்பு ஆகியவை.
நர்ஸ், பெண் உதவியாளர் முதலான பணி களிலும் ஆண்களைவிட பெண்கள் அதிகமாக உள்ளனர்.
பெண்கள் செய்யும் வேலைகளில் ஒருபெரும் பகுதி இன்னமும் அதிகாரபூர்வ புள்ளிவிவரங் களில் பிரதிபலிக்கவில்லை என்று இப்போது விரிவாக ஒத்துக் கொள்ளப்படுகிறது. இதற்குக் காரணம் பல பெண்கள் ஊதியமில்லாத உழைப் பாளர்களாகவும், வீடுகளிலேயே உழைப்பாளர் களாகவும் இருந்து பொருளாதாரத்திற்கு முக்கிய பங்குப்பணி ஆற்றினாலும் இவர்கள் வேலைக்குச் செல்லாத (House Wifes) இல்லத்தரசிகள் என்ற கணக்கில் சேர்க்கப் படுகிறார்கள்.
மேலும் பெண்கள் ஊதியம் பெறாமல் செய் கின்ற உற்பத்திப் பலனுள்ள வேலைகளுக்கு ( நோயாளிகள், முதியோர், குழந்தைகள் ஆகியோரைக் கவனித்துக் கொள்ளுதல் உள்ளிட்ட பணிகளுக்கு) பணமதிப்பு எப்படிக் கொடுப்பது என்பது இன்னமும் ஒரு பிரச்சனை யாகவே உள்ளது.
பெண்களின் எழுத்தறிவு நிலை உயர்ந்திருந் தாலும் மேலாண்மைப் பதவிகளில் பெண்கள் காணப்பட்டாலும் நாடு முழுவதையும் ஒட்டு மொத்தமாகப் பார்க்கும் போது பெண்களின் வேலைவாய்ப்புப் பற்றி மேலே கூறப்பட்ட நிலையில் பெரும் மாற்றம் ஏதும் ஏற்பட்டு விடவில்லை. இதற்கு பல்வேறு காரணங்களைக் குறிப்பிடலாம்.
ஒருகாரணம், பெண்கள் கல்வி பெறுவதற்கும் திறன்களை வளர்த்துக் கொள்வதற்கும் வாய்ப்பு, வசதிகள் பரவலாக இல்லை என்பதாகும். 1993-94 இல் கிராமப்புறங்களில் வேலைக்குச் செல்லும் பெண்களில் 79 % எழுத்தறிவு அற்றவர்களாக இருந்தனர். ஆண்களில் எழுத்தறிவற்றவர்கள் 43.7 %. நகர்புறங்களில் வேலைக்கு செல்லும் பெண்களில் 44.5 %, ஆண்களில் 17.9 % எழுத்தறிவு அற்றவர்களாக இருந்தனர்.
நகர்புறங்களில் எழுத்தறிவற்ற பெண்களின் சதவீதம் குறைவாக இருந்தபோதிலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகமாகவே உள்ளது. பெண்கள் வேலைக்குச் செல்வது பற்றிய நிலைமையில் மாற்றம் மெதுவாகவே இருப்பதற்கு பல்வேறு சமூக கலாசார இடையூறுகள் இருப்பதாகும். குழந்தைகள் பெறுவது தொடர்பான பொறுப்பு களும் ஒரு காரணமாகும். |
|
பொதுவில் பெண்கள் அச்சமின்றி சுதந்திரத் துடனும் பாதுகாப்புடனும் நடமாடுவதற்கான வாய்ப்புகள் எந்தளவிற்கு நடைமுறையில் உள்ளன என்பது குறித்தும் யோசிக்க வேண்டியுள்ளது. இந்நிலையில் பெண்கள் வேலைக்குச் செல்வது என்பது அவ்வளவு இலகுவான செயல் அல்ல.
பெண் என்ற காரணத்தாலேயே அவர்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள், வன்முறைகள் அதிகம். குடும்பத்திலும் குடும்பத்துக்கு வெளி யிலும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் மிக மோசமாகவே உள்ளன. திருமணமான பெண்களுக்கு கணவன் வீடுகளில் நடைபெறும் கொடுமைகள் மிகவும் கவலையளிப்பதாக உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் 5000 வரதட்சணைக் கொடுமை சாவு வழக்குகளையும் 30,000 வரதட்சணை கொடுமை வழக்குகளையும் காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர். மேலும் இருதார வழக்குகள், அனாதையாகவிடப்பட்ட பெண்கள் தொடர்பான வழக்குகள், மனைவி சம்மதத்துடன் மணவிலக்கு போன்றவை அதிக ரித்துக் கொண்டிருக்கின்றன. வீட்டில் நடக்கும் கொடுமைகளைத் தாங்க முடியாமல் பெண்கள் மணமுறிவுக்குச் சம்மதம் தருகின்றனர்.
கணவன் வீட்டை விட்டு ஓடியது தொடர்பான 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் 'ஜீவனாம்ச' வழக்குகள் பல்வேறு நீதிமன்றங் களின் விசாரணைகளில் இருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது.
ஆக தனது வீட்டிலேயே பெண்ணிற்கு பாது காப்பு இல்லை அல்லது எப்போதும் அச்சத் துடன் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலை இருக்குமானால் பெண்கள் சமஉரிமை என்பதெல்லாம் வெறும் காணல் நீராகவே ஆகிவிடும்.
பெண்களுக்கு வீடு மட்டுமல்ல வெளியில் அவர்கள் பணி செய்யும் இடங்களில் பாதுகாப்பு இல்லை என்ற நிலை. ஒவ்வொரு ஆண்டும் ஏறத்தாழ 12,000 பாலியல் வல்லுறவு வழக்குகள், 13,000 பெண்கள், பெண் குழந்தைகள் கடத்தல் வழக்குகள், பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொள்வது தொடர்பான வழக்குகள் 26,000 பாலியல் வன்முறை தொடர்பான 11,000 வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.
இந்தப் புள்ளிவிபரங்கள் பெண்களுக்கு எதிராக நடத்தப்படும கொடுமைகளில் 10 முதல் 25 % அளவாகத் தான் இருக்கும். மீதி 75 % பெண்களுக்கு எதிரான சம்பவங்கள் வழக்குகள் தாக்கல் செய்யப்படாமலேயே விடப்படுகின்றன. பதிவு செய்யப்படும் வழக்குகளிலும் தேவையான அளவிற்கு புலனாய்வு செய்யப்படுவதில்லை. நீதிமன்றங்களில் வழக்குகள் அலட்சியப் போக்கில் நடத்தப்படுகின்றன. அனாவசியமான தொந்தரவுகள் தரும் வகையில் வழக்குகள் விசாரணைகள் தாமதாமாகிறது.
பாதிக்கப்பட்ட பெண்களது உணர்வுகள் பிரச்சனைகளில் நீதிமன்றங்கள் அக்கறை செலுத்துவதில்லை. மேலும் காவல் நிலையங் களில் பெண்கள் முறைப்பாடு செய்ய செல்லும் போது காவலர்களாலேயே பெண்கள் மோசமாக துன்புறுத்தப்படுவதும் கொடுமைப் படுத்தப்படுவதும்கூட சாதாரணமாக நடைபெறு கின்றன.
ஆக பெண்கள் மேம்பாடு பெண்கள் சமத்துவம் என்பதெல்லாம் வெறும் பேச்சளவில் மட்டும்தான் உள்ளன. பெண்களின் சுயமரியாதைக்கும் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் கொடுக்கக் கூடிய சமூகச் சூழல் உருவாக்கப்பட வேண்டும். அதற்கான விழிப்புணர்வும் கல்வியூட்டலும் பரவலாக்கப்பட வேண்டும். |
|
|
|
|
|
|
|