|
கிராண்ட் ஸ்லாம் பட்டம் வெல்வதே எனது இலக்கு |
|
- கேடிஸ்ரீ|பிப்ரவரி 2006| |
|
|
|
கிராண்ட் ஸ்லாம் போட்டியில் பட்டம் வெல்வதே எனது இலக்கு. அதற்காகத்தான் கடினமாக உழைத்து வருகிறேன். ஆனால் எங்கு, எப்போது அதைக் கைப்பற்றுவேன் என என்னால் இப்போது கூறுவது சிரமம். ஆதலால், கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்வதற்குக் காலத்தை நிர்ணயித்துக் கொள்ளவில்லை.
சானியா மிர்சா, டென்னிஸ் வீராங்கனை, பத்திரிகையாளர்களிடம்...
*****
நாடகம் ஆறுமணிக்கு ஆரம்பிக்கப்பட வேண்டுமென்றால் கரெக்டாக ஆறு மணிக்கு ஆரம்பித்துவிடுவார். நேர விஷயத்தில் ரொம்பக் கட்டுப்பாடாக இருப்பார். ஷுட்டிங்கிற்குக் குறித்த நேரத்தில் வந்துவிடுவார். தாமதமாக வந்து மற்றவர்களைக் காக்க வைக்கும் பழக்கம் அவருக்கு எப்போதும் கிடையாது.
மறைந்த நடிகர் ஆர்.எஸ். மனோகர் பற்றி நடிகை மனோரமா பத்திரியாளர்களுக்கு அளித்த பேட்டியிலிருந்து...
*****
தமிழகத்தில் எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், வெளியீட்டாளர்கள், விற்பனையாளர்கள் பலர் உள்ளனர். எழுத்தாளர், பதிப்பாளர், வெளியீட்டாளர், விற்பனையாளர் என்ற நான்கு பணிகளையும் செய்தவர் எனது தந்தை தமிழ்வாணன். அதில் வெற்றியும் கண்டார். அவர் எழுதிய நூல்களை அவரே பதிப்பார். அவரே வெளியிடுவார். அவரே விற்பனையாளராகவும் இருந்தார். அவர் எழுதிய நூல்கள் மட்டுமே மணிமேகலை பிரசுரம் மூலம் வெளியிடப்பட்டுவந்தன. பிற எழுத்தாளர்களின் புத்தகத்தை இந்நிறுவனம் வெளியிடவில்லை.
லேனா தமிழ்வாணன், சென்னை புத்தக கண்காட்சியில் மணிமேகலை பிரசுரத்தின் புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் பேசியது...
***** |
|
சமீபத்திய சுனாமிக்குப் பிறகு மாமல்லபுரம் உள்ளிட்ட சில இடங்களில் தொல்லியல் சான்றுகள் கிடைத்துள்ளன. தொல்லியல் சான்றுகளைப் பாதுகாப்பது நமது கடமை. சமீபகாலமாக சினிமாவில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. முன்பெல்லாம் உலக அதிசயங்களாகக் கருதப்படும் இடங்களில் படம் பிடிப்பர். இப்போது தொல்லியல் மையங்களில் படப்பிடிப்பை நடத்து கின்றனர். தொல்லியல் சான்றுகளின் முக்கியத்துவத்தை மக்கள் உணரத் தொடங்கி இருப்பதையே இது காட்டுகிறது.
டி.எஸ். ஸ்ரீதர், தமிழக தொல்லியல் துறை சிறப்பு கமிஷனர், ஒரு கருத்தரங்கில் பேசியது...
*****
கடினமான பருவ சூழ்நிலை, பல்வேறு பந்துகளைப் பயன்படுத்துதல் போன்ற அம்சங்களால் இந்தியாவுக்கு எதிரான தொடர் பலவகைகளில் எனக்குச் சவாலாக இருக்கும். என்றாலும், தாயகத்தில் சவாலை எதிர்கொள்ளத் தயார்படுத்தி வருகிறேன்.
டேனிஷ் கனேரியா, பாகிஸ்தானிய சுழற்பந்து வீச்சாளர், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில்...
தொகுப்பு: கேடிஸ்ரீ |
|
|
|
|
|
|
|