|
|
இங்கு காணப்படும் கேள்விகள் அமெரிக்க நாட்டு வழக்கறிஞர்களால், நீதிமன்றங்களில் சாட்சிக் கூண்டில் நிறுத்தப்பட்டவர்களிடம் கேட்கப்பட்டனவாகும். இவை அமெரிக்க நீதிமன்ற ஆவணங்களிலிருந்து சேகரிக்கப்பட்டவை. நாட்டிலேயே மிக அதிகமான வருமானம் உடைய வழக்கறிஞர்கள் கேட்ட கேள்விகளையும், அதற்கான பதில்களையும் படித்து ரசியுங்கள்.
கேள்வி : அப்புறம் என்ன நடந்தது? பதில் : அவன் கூறினான். ''நீ என்னை அடையாளம் காட்டிவிடுவாய். ஆகையால் நான் உன்னை கொல்லப் போகிறேன்'' கேள்வி : அவன் உன்னை கொலை செய்தானா? கேள்வி : போரில் இறந்தது நீங்களா அல்லது உங்கள் சகோதரரா? கேள்வி : இப்போது உங்களுக்கு ஒரு புகைப்படத்தை காண்பிக்கப் போகிறேன். அதை அடையாளம் தெரிகிறதா என்று கூறுங்கள். பதில் : என்னுடைய புகைப்படம்தான் அது கேள்வி : அதை எடுக்கும்போது நீங்கள் அங்கு இருந்தீர்களா? கேள்வி : திருமதி ஜான்ஸன், உங்களது முதல் திருமணம் எவ்வாறு முடிந்தது? பதில் : மரணத்தில் கேள்வி : யாருடைய மரணத்தில்? கேள்வி : நீங்கள் எவ்வளவு மாதம் கர்ப்பம் என தெரியுமா? பதில் : இந்த நவம்பர் 8ம் தேதி 3 மாதமாகிறது கேள்வி : அப்போது கருத்தரித்த தேதி ஆகஸ்ட் 8 ஆகிறது இல்லையா? பதில் : ஆம் கேள்வி : அந்த சமயம் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? கேள்வி : திருமதி ஜோன்ஸ், உங்கள் மனநிலை கட்டுப்பாட்டில் உள்ளது என நம்புகிறீர்களா? பதில் : ஒரு வகையில் நம்புகிறேன். |
|
கேள்வி : எத்தனை தடவை நீங்கள் தற்கொலை செய்து கொண்டீர்கள்? கேள்வி : அவளுக்கு மூன்று குழந்தைகள் இருந்தன. சரியா? பதில் : ஆம். கேள்வி : எத்தனை ஆண்கள்? பதில் : ஒன்றுமில்லை. கேள்வி : அப்போது அவைகள் பெண்களோ? கேள்வி : அது என்ன என்று உனக்குத் தெரியாது. அது எப்படி இருந்தது என உனக்குத் தெரியாது. ஆனால் அதை விவரிக்க முடியுமா? கேள்வி : அந்த படிக்கட்டுகள் கீழே அடித்தள மட்டத்திற்கு செல்கின்றன என கூறினாய் இல்லையா? பதில் : ஆம் கேள்வி : அந்த படிக்கட்டுகள், அவை மேலேயும் செல்கின்றனவா?
படித்து ரசித்து அனுப்பியவர்: திருநெல்வேலி விஸ்வநாதன் |
|
|
|
|
|
|
|