சூசி நாக்பால்
|
|
|
|
|
பிரபல எழுத்தாளரும், பத்திரிகையாசிரியராக இருந்தவருமான அனுராதா ரமணன் (62) மாரடைப்பால் சென்னையில் காலமானார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், எண்ணூறுக்கும் அதிகமான நாவல், குறுநாவல், கட்டுரைகளையும் எழுதியுள்ள அனுராதா ரமணன், ஓவியம் மற்றும் இசையிலும் தேர்ச்சி பெற்றவர். காமேஸ்வரி அய்யர் என்ற பெயரில், விகடனில் இவர் எழுதிய இசை விமர்சனக் கட்டுரைகள் மிகப் பிரபலம். சிறை, கூட்டுப்புழுக்கள், ஒரு வீடு இரு வாசல் போன்ற திரைப்படங்கள் இவரது கதைகளைத் தழுவி எடுக்கப்பட்டவை. தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, கன்னடத்திலும் இவரது கதைகள் படமாகியுள்ளன. பாசம், புன்னகை, அர்ச்சனைப் பூக்கள், பன்னீர் புஷ்பங்கள் என இவரது கதைகள் தொலைக்காட்சித் தொடர்களாகவும் வெளியாகி வரவேற்பைப் பெற்றன. தனது சிறுகதைக்காக தங்கப்பதக்கமும், சிறந்த தேசிய சமூகநல எழுத்தாளருக்கான ராஜீவ் காந்தி விருதும், 'நாவல்களின் ராணி' உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட விருதுகளையும் பெற்ற அனுராதா ரமணன், சமீககாலமாகவே இதய நோய்க்காகச் சிகிச்சை பெற்று வந்தார்.
ஒலி வடிவத்தில் கேட்க - Audio Readings by Saraswathi Thiagarajan
|
|
"எனக்கு இலக்கியம் தெரியாது" - அனுராதா ரமணன் தென்றலுக்கு அளித்த நேர்காணல் ஏப்ரல் 2004 இதழில் வெளியானது.
மதுரபாரதி |
|
|
More
சூசி நாக்பால்
|
|
|
|
|
|
|