Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2019 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | மேலோர் வாழ்வில் | பொது
சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | சாதனையாளர் | அஞ்சலி | விலங்கு உலகம் | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
கிறிஸ்து பிறப்பு கொண்டாட்டங்கள்
- செய்திக்குறிப்பிலிருந்து|டிசம்பர் 2019|
Share:
அட்லாண்டா தமிழ் சபையின் மூலம் கிறிஸ்து பிறந்த நற்செய்தியை அறிவிக்கும் வண்ணம் கிறிஸ்துமஸ் பாடல்களை வீடுதோறும் அவர்கள் அழைப்பிற்கிணங்கப் பாடும் தருணம் இது. ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை மாலை நேரத்தில் வீடு வீடாகச் சபை போதகர் பால்மர் பரமதாஸ் அவர்களும் சபையாரும் போய் கிறிஸ்துமஸ் பாடல்களைப் (Christmas Carols) பாடுவதோடு, கிறிஸ்து பிறந்த நற்செய்தியையும் கூறுவார்கள்.

குடும்பப் பாடல் ஆராதனை (Family Sing Song Service): குடும்பத்தினரின் திறமைகளையும் இறைவன் அருளிய தாலந்துகளையும் வெளிப்படுத்தும் வண்ணமாக ஆலயத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் பக்திப் பாடல்களைப் பாடும் நிகழ்ச்சி டிசம்பர் 8ம் தேதி ஞாயிறு காலை 10:00 மணிக்கு அட்லாண்டா தமிழ் சபை தேவாலயத்தில் நடைபெறும்.

சபையின் பாடல் குழுவினர் சிறப்பு கிறிஸ்துமஸ் பாடல்களைப் பாடும் நிகழ்சி (Christmas Choir Carols) டிசம்பர் 15 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணிக்கு நடைபெறும்.

சபையின் ஞாயிறு பள்ளி மாணவ மாணவியரின் ஆராதனை டிசம்பர் 22ம் தேதி ஞாயிறு காலை 10 மணிக்கு நடைபெறும். அவர்களது தாலந்துகளை வெளிக்கொண்டு வரும் நோக்கோடு நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் (Youth & Children Christmas Service) டிசம்பர் 22ம் தேதி ஞாயிறு மாலை 5:30 மணிக்கு நடைபெறும்.

கிறிஸ்துமஸ் விழா நிகழ்ச்சிகளின் உச்சக்கட்டமாக டிசம்பர் 25ம் தேதி புதன் காலை 10:00 மணிக்கு கிறிஸ்துமஸ் ஆராதனை நடைபெறும். அதில் போதகர் பால்மர் பரமதாஸ் அவர்கள் விசேச செய்தி அளிப்பார்கள். மதியம் கிறிஸ்துமஸ் பல்சுவை விருந்து வழங்கப்படும்.

வருடத்தின் கடைசி நாட்களாகிய (சனி, ஞாயிறு, திங்கள்) டிசம்பர் 28 முதல் 30ம் தேதி வரை தினமும் ஆலயத்தில் வைத்து காலை 10:00 மணிமுதல் மாலை 7 மணிவரை உபவாச ஜெபம் நடைபெறும். இதில் கலந்துகொண்டு நம்மைச் சுத்திகரித்து அடுத்த வருடத்திற்குள் நுழைய ஆயத்தமாவோம்,.

2019ம் வருடத்தை ஆலயத்தில் தொடங்கிய நாம், இவ்வாண்டை ஆலயத்தில் முடித்து, புதுவருடத்தை ஆரம்பிக்கும் வண்ணம் டிசம்பர் 31ம் தேதி செவ்வாய் இரவு 10:30 மணிக்கு விசேசித்த காத்திருப்பு ஆராதனை (Watch night Service) நடைபெறும். வருடம் முழுவதும் காத்த இறைவனுக்கு வருடத்தின் கடைசி நிமிடத்தில் நன்றி செலுத்திவிட்டு, 2020 புதிய வருடத்தை ஆலயத்தில் தொடங்கி ஆசீர்வாதம்பெறுங்கள்!

மேலும் விபரங்களுக்குப் பார்க்க: www.atlantatamilchurch.org
செய்திக்குறிப்பிலிருந்து
Share: 




© Copyright 2020 Tamilonline