BATM நிகழ்ச்சிகள் பார்வையற்றோருக்கு உதவ 'சரணாகதி' CIF 'சாரல்' இசை இரவு
|
|
|
|
|
ஆகஸ்ட் 4, 2012 சனிக்கிழமை மாலை 4 மணிக்கு சாரடாகோ உயர்நிலைப் பள்ளியிலுள்ள மெகாஃபீ அரங்கில் லாஸ்யா நடனப் பள்ளி தனது இருபதாண்டு நிறைவு விழாவைக் கொண்டாடும் வகையில் 'லாஸ்யா விம்சதி' என்னும் நடன நிகழ்ச்சியை வழங்கவிருக்கிறது. புதுமையான நடன நிகழ்ச்சிகள் மூலம் விரிகுடாப் பகுதி மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர் பிரபல பரதநாட்டியக் கலைஞர் வித்யா சுப்ரமணியன். பத்மஸ்ரீ டாக்டர். பத்மா சுப்ரமணியம், கலைமாமணி வழுவூர் ஸ்ரீ எஸ்.கே. ராஜரத்தினம் ஆகியோரிடம் பயிற்சி பெற்றவர். உலகெங்கும் பயணம் செய்து நாட்டிய நிகழ்ச்சிகள் நடத்தி வரும் அவர், அமெரிக்க இளைய தலைமுறையினரும் நடனம் பயில்வதற்காக 1992ல் விரிகுடாப் பகுதியில் லாஸ்யா டான்ஸ் அகாடமியைத் தொடங்கினார்.
வித்யா மேற்கொண்ட கலைப்பயணத்தின் மலரும் நினைவுகளாக 'லாஸ்யா விம்சதி' அமையும். இருபது வருடங்களில் லாஸ்யா தயாரித்து வழங்கிய பல்வேறு நாட்டிய நிகழ்ச்சிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நடனங்கள் பலவற்றை மாணவர்கள் வழங்குவார்கள். தற்போதைய மாணவர்களுடன் முன்னாள் மாணவர்களும் இதற்கெனப் பல பகுதிகளிலிருந்து வந்து நடனமாட இருக்கின்றனர். நிகழ்ச்சிகள் பலவற்றிற்கு அவர்களே நட்டுவாங்கம் செய்ய இருக்கின்றனர் என்பதும் தனிச்சிறப்பு.
நிகழ்ச்சி விவரங்கள்: நிகழ்ச்சி: லாஸ்யா விம்சதி நாள்: ஆகஸ்ட் 4, சனிக்கிழமை நேரம்: மாலை 4.00 மணி இடம்: McAfee Center, Saratoga High School, 20300 Herriman Ave., Saratoga, CA. நுழைவுக் கட்டணம் : $ 15/- |
|
மேலும் விவரங்களுக்கு: Sujatha - (suji_venugopal@yahoo.com) Srividhya - (srividhya.srikanth@yahoo.com)
அருணா கிருஷ்ணன், கலிபோர்னியா |
|
|
More
BATM நிகழ்ச்சிகள் பார்வையற்றோருக்கு உதவ 'சரணாகதி' CIF 'சாரல்' இசை இரவு
|
|
|
|
|
|
|