|
தென்றல் சிறுகதைப் போட்டி - 2011 |
|
- |செப்டம்பர் 2011| |
|
|
|
|
|
தென்றல் சிறுகதைப் போட்டியை மீண்டும் அறிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறது. சிறந்த மூன்று கதைகளுக்குக் கீழ்க்கண்டவாறு பரிசுகள் உண்டு:
முதல் பரிசு: $250 இரண்டாம் பரிசு: $150 மூன்றாம் பரிசு: $100
நகைச்சுவை, சமூகம், அலுவலகம், அறிவியல் என்று எதைப் பற்றியும் சிறுகதைகள் அமையலாம். சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்கலாம். நல்ல தமிழில் விறுவிறுப்பாக எழுதப்பட வேண்டும். நட்பு, மனிதநேயம், கருணை, உழைப்பு, தியாகம், கொல்லாமை போன்ற உயர் பண்புகளைச் சித்திரிப்பவையாக இருத்தல் நல்லது.
சிறுகதைகள் தென்றல் இதழில் இரண்டு பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். (ஒரு நோட்பேடில் ஒருங்குறி (யூனிகோட்) எழுத்துருவில் சுமார் 8 கேபி என்பது ஒரு பக்கம் வரலாம்).
அனுப்புவோர் கதை(கள்) தமது சொந்தக் கற்பனையில் உருவானது, இதுவரை வேறு எதிலும் வெளியாகவோ, பரிசீலனைக்கு அனுப்பப்படவோ இல்லை என்று சான்றளிக்க வேண்டும்.
ஒருவரே எத்தனை கதைகள் வேண்டுமானால் அனுப்பலாம்.
மின்னஞ்சல் இணைப்பாக அனுப்புவோர் கதைகளை ஒருங்குறி (Unicode) எழுத்துருவில் அனுப்ப வேண்டும். மின்னஞ்சலில் அனுப்பி வைப்பதைப் பெரிதும் வரவேற்கிறோம்.
பரிசு பெறும் கதைகள் தவிர, தேர்ந்தெடுக்கப்பட்டவை தென்றலில் வெளியிடப்படலாம். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் கதைகளின் பட்டியலும் அறிவிக்கப்படும்.
தேர்வு குறித்து 'தென்றல்' ஆசிரியர் குழுவின் முடிவே இறுதியானதாகும். இது குறித்து எந்தவிதக் கடிதப் போக்குவரத்தும் வைத்துக்கொள்ள இயலாது.
தமிழகம் தவிர்த்து உலகின் பிற பகுதிகளில் வசிப்போர் பங்கு கொள்ளலாம். இணைப்புக் கடிதத்தில் தமது முழு அஞ்சல் முகவரியை எழுதவேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் கதைகளைத் தென்றல் இதழிலும் www.Tamilonline.com வலையகத்திலும் வெளியிடும் உரிமை 'தென்றல்' இதழுக்கு உண்டு. பின்னர் சிறுகதைத் தொகுப்பு நூலாகவும் வெளியிடப்படலாம். படைப்புகளின் உரிமை படைப்பாளிகளிடமே இருக்கும்.
படைப்புகள் எம்மிடம் வந்துசேரக் கடைசி நாள்: 30 செப்டம்பர் 2011.
டிசம்பர் 2011 தென்றல் இதழில் முடிவுகள் அறிவிக்கப்படும்.
மின்னஞ்சலில் அனுப்ப: thendral@tamilonline.com (with subject: Shortstory Contest)
தபாலில் அனுப்ப: Thendral, PO Box: 60787, Sunnyvale, CA 94088, USA. |
|
ஆசிரியர்: தென்றல்
|
|
|
|
|
|
|
|