Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | சாதனையாளர்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
அமெரிக்கத் தமிழ்ப் பள்ளிகள் இரண்டாவது ஆண்டு நிறைவு விழா
மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்கா-கனடா விஜயம்
- சூப்பர் சுதாகர்|ஜூன் 2009|
Share:
Click Here Enlarge2009 ஜூன் 3ம் தேதி முதல், ஜூலை இறுதிவரை, மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி தேவி அவர்கள் அமெரிக்கா மற்றும் கனடாவின் பல ஊர்களுக்கு வருகைதர இருக்கிறார். அன்பு, உண்மை, துறவு, தியாகம் முதலிய தெய்வீக குணங்களின் இருப்பிடமாகத் திகழும் அம்மாவை, 'அரவணைக்கும் ஞானி' (Hugging Saint) என்று அழைக்கிறார்கள். மனித இனத்திற்கு அயராது சேவை செய்யும் அம்மா மக்களின் துயர் துடைப்பதற்காகத் தமது வாழ்நாளை அர்ப்பணித்துள்ளார். தம்மிடம் வருவோரைப் பரிவோடு அரவணைத்து, அளவற்ற அன்பை வாரி வழங்குகிறார்.

அம்மா வருகை தர இருக்கும் ஊர்களும், தேதிகளும்:

சான் ஃபிரான்சிஸ்கோ-
வளைகுடா பகுதி 06.03 - 06.13
லாஸ் ஏஞ்சல்ஸ் 06.15 - 06.19
ஆல்பகர்க்கி 06.21 - 06.25
டாலஸ் 06.27 - 06.28
கோரல்வில்,அயோவா 06.30 - 07.01
சிகாகோ 07.03 - 07.04
நியுயார்க் 07.07 - 07.09
வாஸிங்டன் டி.சி. 07.12 - 07.13
பாஸ்டன் 07.15 - 07.18
டொரன்டோ, கனடா 07.20 - 07.23

இலவசப் பொதுநிகழ்ச்சிகளில் அம்மாவின் தரிசனம், ஆன்மீகச் சொற்பொழிவுகள், தியானம், பஜனை நடைபெறும். சில ஊர்களில் ஆன்மீக முகாம்களும் (retreat) நடைபெறும் - இதில், ஆன்மீக மற்றும் தியான வகுப்புகள், சேவை, அம்மாவோடு கேள்வி-பதில், அம்மாவின் உணவு பரிமாறல், ஒருங்கிணைந்த அமிர்தா தியானம் (Integrated Amrita Meditation) ஆகியவை நடைபெறும்.
அம்மாவின் அமுத மொழிகளில் சில:

"மகிழ்ச்சியான வாழ்க்கையின் அடிப்படை - அன்பு. குடும்பத்தை இணைப்பது அன்புதான். அன்பை பகிர்ந்து கொள்வதில் தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது. கணவன்-மனைவி, பெற்றோர்-குழந்தைகள் ஆகியோர் இடையே பரஸ்பரம் அன்பு இருக்க வேண்டும். உடல் வளர உணவு எப்படி அவசியமோ, அதுபோல், ஆன்மா வளர அன்பு மிகவும் அவசியம். அன்பு, ஆன்மாவுக்குத் தாய்ப்பாலைவிட இன்றியமையாதது. அன்பே கடவுளின் முகம். அன்புடையவர்களால் கடவுளை உணர முடியும். அன்பினால் எல்லா மனக்காயங்களையும் ஆற்ற முடியும். அன்பு பொங்கும் முகத்தில் இருந்து வெளிப்படும் புன்னகைதான் உலகிலேயே மிகவும் அழகானது."

"ஒரு வியாபாரிக்குப் பெரிய இழப்பு, தனது முதலீட்டை இழப்பதாகும். நம் வாழ்க்கையில் பெரிய இழப்பு, அன்பை இழப்பதாகும். அன்பே வாழ்க்கையின் உண்மையான சேமிப்பு. எனவே நாம் அன்பை நம் இதயத்தில் வளர்க்க வேண்டும்."

அம்மா ஆற்றும் எண்ணற்ற பொதுநலத் தொண்டுகளைப் பற்றி அறிய: www.amritapuri.org
மேலும் விபரங்களுக்கு: www.amma.org

சூப்பர் சுதாகர்
More

அமெரிக்கத் தமிழ்ப் பள்ளிகள் இரண்டாவது ஆண்டு நிறைவு விழா
Share: 




© Copyright 2020 Tamilonline