2009 ஜூன் 3ம் தேதி முதல், ஜூலை இறுதிவரை, மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி தேவி அவர்கள் அமெரிக்கா மற்றும் கனடாவின் பல ஊர்களுக்கு வருகைதர இருக்கிறார். அன்பு, உண்மை, துறவு, தியாகம் முதலிய தெய்வீக குணங்களின் இருப்பிடமாகத் திகழும் அம்மாவை, 'அரவணைக்கும் ஞானி' (Hugging Saint) என்று அழைக்கிறார்கள். மனித இனத்திற்கு அயராது சேவை செய்யும் அம்மா மக்களின் துயர் துடைப்பதற்காகத் தமது வாழ்நாளை அர்ப்பணித்துள்ளார். தம்மிடம் வருவோரைப் பரிவோடு அரவணைத்து, அளவற்ற அன்பை வாரி வழங்குகிறார்.
அம்மா வருகை தர இருக்கும் ஊர்களும், தேதிகளும்:
சான் ஃபிரான்சிஸ்கோ- வளைகுடா பகுதி 06.03 - 06.13 லாஸ் ஏஞ்சல்ஸ் 06.15 - 06.19 ஆல்பகர்க்கி 06.21 - 06.25 டாலஸ் 06.27 - 06.28 கோரல்வில்,அயோவா 06.30 - 07.01 சிகாகோ 07.03 - 07.04 நியுயார்க் 07.07 - 07.09 வாஸிங்டன் டி.சி. 07.12 - 07.13 பாஸ்டன் 07.15 - 07.18 டொரன்டோ, கனடா 07.20 - 07.23
இலவசப் பொதுநிகழ்ச்சிகளில் அம்மாவின் தரிசனம், ஆன்மீகச் சொற்பொழிவுகள், தியானம், பஜனை நடைபெறும். சில ஊர்களில் ஆன்மீக முகாம்களும் (retreat) நடைபெறும் - இதில், ஆன்மீக மற்றும் தியான வகுப்புகள், சேவை, அம்மாவோடு கேள்வி-பதில், அம்மாவின் உணவு பரிமாறல், ஒருங்கிணைந்த அமிர்தா தியானம் (Integrated Amrita Meditation) ஆகியவை நடைபெறும்.
அம்மாவின் அமுத மொழிகளில் சில:
"மகிழ்ச்சியான வாழ்க்கையின் அடிப்படை - அன்பு. குடும்பத்தை இணைப்பது அன்புதான். அன்பை பகிர்ந்து கொள்வதில் தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது. கணவன்-மனைவி, பெற்றோர்-குழந்தைகள் ஆகியோர் இடையே பரஸ்பரம் அன்பு இருக்க வேண்டும். உடல் வளர உணவு எப்படி அவசியமோ, அதுபோல், ஆன்மா வளர அன்பு மிகவும் அவசியம். அன்பு, ஆன்மாவுக்குத் தாய்ப்பாலைவிட இன்றியமையாதது. அன்பே கடவுளின் முகம். அன்புடையவர்களால் கடவுளை உணர முடியும். அன்பினால் எல்லா மனக்காயங்களையும் ஆற்ற முடியும். அன்பு பொங்கும் முகத்தில் இருந்து வெளிப்படும் புன்னகைதான் உலகிலேயே மிகவும் அழகானது."
"ஒரு வியாபாரிக்குப் பெரிய இழப்பு, தனது முதலீட்டை இழப்பதாகும். நம் வாழ்க்கையில் பெரிய இழப்பு, அன்பை இழப்பதாகும். அன்பே வாழ்க்கையின் உண்மையான சேமிப்பு. எனவே நாம் அன்பை நம் இதயத்தில் வளர்க்க வேண்டும்."
அம்மா ஆற்றும் எண்ணற்ற பொதுநலத் தொண்டுகளைப் பற்றி அறிய: www.amritapuri.org மேலும் விபரங்களுக்கு: www.amma.org
சூப்பர் சுதாகர் |