பாலாற்றின் குறுக்கேயும் அணை? அணி மாறும் காட்சிகள் கேபிள் போர்கள்
|
|
தேர்தல் பருவத்தில் சலுகை மழை |
|
- கேடிஸ்ரீ|பிப்ரவரி 2006| |
|
|
|
மக்களவைத் தேர்தலில் தோல்வியைச் சந்தித்த அ.தி.மு.க. அரசு தன்னுடைய முதல் இரண்டு ஆண்டுகளில் அறிவித்த பல்வேறு அதிரடித் திட்டங்களையும், பறித்த சலுகைகளையும் படிப்படியாக மறுபடியும் விலக்கிக் கொண்டு, அ.தி.மு.க. அரசு மக்கள் விரோத அரசு என்னும் பிம்பத்தை மாற்ற முயற்சித்து வருகிறது. இச்சட்டப் பேரவையின் கடைசி நிதிநிலை அறிக்கையை அரசு தாக்கல் செய்துள்ளது.
மூன்றாவது ஆண்டாக வரிவிதிப்புகள் இல்லாத பட்ஜெட். இந்த இடைக்கால பட்ஜெட் அரசு ஊழியர்களுக்கு 1200 கோடி ரூபாய்க்குச் சலுகைகளை வாரி வழங்கி யிருக்கிறது. அதன்படி தற்போதைய அடிப்படை ஊதியத்தின் 50 சதவீத அகவிலைப்படியை அடிப்படைச் சம்பளத் துடன் இணையும். மேலும் அரசுப் பணி களில் நேரடி நியமனத்திற்கு விதிக்கப் பட்டிருந்த தடை உத்தரவை முழுவதுமாக விலக்கிக் கொண்டுள்ளது.
சமீபத்திய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ. 358 கோடி அளவிற்கு நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டது. அரசு ஊழியர்கள், விவசாயிகள், மாணவர்கள், தேயிலை விவசாயிகள், பெண்கள் என்று அனைத்துத் தரப்பினருக்கும் பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளது தமிழக அரசு. |
|
அ.தி.மு.க அரசின் இந்த இடைக்கால நிதிநிலை அறிக்கையைத் தேர்தல் நாடகம் என்று எதிர்க்கட்சிகள் கருத்துத் தெரிவித் தாலும் அரசு ஊழியர்களிடையேயும், விவசாயிகளிடை§யும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது நிஜம்.
கேடிஸ்ரீ |
|
|
More
பாலாற்றின் குறுக்கேயும் அணை? அணி மாறும் காட்சிகள் கேபிள் போர்கள்
|
|
|
|
|
|
|