|
ஜூன் 2016: வாசகர் கடிதம் |
|
- |ஜூன் 2016||(1 Comment) |
|
|
|
நான் தென்றல் இதழ்களை விரும்பிப் படிக்கிறேன். நல்ல தரமான கதைகள், கட்டுரைகள், பேட்டிகள் ரசிக்கும்படி உள்ளன. மே இதழில் மூளைக்கு வேலை பகுதியில் முதல் கேள்விக்கு விடை: 5*5*5*5*5*5 = 15625. நீங்கள் கொடுத்துள்ள விடை 78125 என்பது தவறு நான்காவது கேள்விக்கு விடைகள்: ராதாவின் வயது 5*3 = 15. நீங்கள் கொடுத்தது போல் 5^3 = 15 அல்ல. கீதாவின் வயது 4*3 = 12. 4^3 = 12 அல்ல.
பேரா. ஆர். நாராயணன், கேம்ப்: ஃப்ரீமான்ட் (தவறுகளைச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. கவனக்குறைவுக்கு வருந்துகிறோம். - ஆசிரியர்)
*****
மே இதழ் வழக்கம்போல் அருமை. பத்மஸ்ரீ விருதுபெற்ற ஸ்ரீநிவாஸன் அவர்களின் உற்சாகம், சேவை மனப்பான்மை, ஹிந்து மிஷன் மருத்துவ மனைக்குச் செய்துவரும் பணிகள் போன்றவற்றை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இவரின் நேர்காணல் தென்றல் வாசகர்களுக்கு ஒரு நல்ல அன்பளிப்பு.
கே. ராகவன், பெங்களூரு, இந்தியா
***** |
|
ஓராண்டுக்குப் பிறகு இங்கு வந்தவுடன் என் மருமகளிடம் நான் கேட்டது 'தென்றல்'தான். முன்னாளைய தமிழ்நாட்டு இதழ்களின் தீவிர வாசகன் நான். தற்போதைய மாற்றங்களுடன் வரும் இதழ்கள் என்னை ஈர்க்காததால் ஈடுபாடின்றி வாசிப்பவன். இம்மாதத் தென்றலில் மூழ்கிப்போனேன். தொடர்கதைகள், சிறுகதைகள், ஆன்மீகச்செய்திகள், சிறுவர்பகுதி, சிறந்தவர்களின் நேர்காணல், சினிமா பகுதி, இசை முன்னோடிகள் எனச் சிறப்பாக இருந்தது. அமெரிக்காவாழ் தமிழர்களின் தமிழார்வத்தைத் தொடர்ந்து தூண்டும் தங்களின் பணி மிகுந்த பாராட்டுக்குரியது.
சுப்ரமணியன் ராமச்சந்திரன், வெதர்ஃபோர்டு சர்க்கிள், ஆல்ஃபரெட்டா, ஜார்ஜியா |
|
|
|
|
|
|
|